வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘விஜய் 68’ உருவாக உள்ளது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்காக அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு நடிகர் விஜய் சென்றுள்ளார்.
நடிகர் விஜய், அமெரிக்காவில் டென்ஜால் வாஷிங்டன் நடித்துள்ள ஈக்வலைஸர் 3 திரைப்படத்தினை பார்த்துள்ளார். விஜய்யின் ரசிகர் ஒருவர் அவரது படத்தினை பார்த்ததுபோவே விஜய்யும் கைகளை நீட்டி கொண்டாடி பார்த்துள்ளார். இந்தப் புகைப்படத்தினை இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதையும் படிக்க: வெளியானது இறைவன் படத்தின் டிரைலர்!
யார் இந்த டென்ஜெல் வாஷிங்டன்? 2 முறை ஆஸ்கர் விருது வாங்கியவர். 9 முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட சிறப்பான நடிகர். இவர் நடிகர் மட்டுமல்ல தயாரிப்பாளரும் இயக்குநரும் ஆவார். இவர் நடிப்பில் தி ஈக்வலைஸர் படத்தின் 3வது பாகம் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
ஏற்கனவே டென்ஜெல் வாஷிங்டனுக்கு தமிழ் ரசிகர்கள் இருப்பினும் நடிகர் விஜய்யினால் பெரிம்பான்மையான தமிழ் ரசிகர்கள் மத்தியில் திடீரென பிரபலமாகியுள்ளார்.
ஒரே நாளில் இவரை பற்றி கூகுளில் அதிக நபர்கள் தேடியுள்ளது குறிப்பிடத்தக்கது.