நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்னம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சமீபத்தில் ‘டக்கர்’ வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
தற்போது, பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய சு.அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த், ‘சித்தா’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார்.
சித்தப்பா உறவினை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. வழக்கமான மெலோ டிராமாவாக இல்லாமல் த்ரில்லர் படமாக இருக்குமென இயக்குநர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க | சமுத்திரக்கனி இயக்கத்தில் சிரஞ்சீவி?
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இப்படத்தின் முதல் திரையிடலைப் பார்த்ததும் தன் வாழ்த்துக்களை விடியோ மூலம் வெளியிட்டுள்ளார்.
அதில், “நல்ல படங்களைப் பார்க்க, எடுக்க ஆசைப்படும் தமிழ் சினிமாவின் உன்னத ரசிகர் தம்பி சித்தார்த். சித்தா திரைப்படம் சித்தப்பா உறவினை மையமாக் கொண்டு உருவாகியுள்ளது. என் அண்ணன் சாருஹாசன் மகள் நந்தினி மூலமாக நான் 4 வயதிலேயே சித்தப்பா ஆகிவிட்டேன். நானும் அவரும் சேர்ந்தே பள்ளிக்கு செல்வோம். சித்தப்பாவாக என் அனுபவம் இது. சித்தா - சித்தப்பாவின் அனுபவத்தைப் படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். இந்தப் படம் சிறந்த வெற்றியைப் பெற என் வாழ்த்துக்கள்” எனக் கூறியுள்ளார்.
Ulaganayagan #KamalHaasan about #Chithha movie
â AmuthaBharathi (@CinemaWithAB) September 14, 2023
He appreciates Siddharth & tells movie will be a heart touching one
Ulaganayagan does this very rarely...seems the movie going to be a promising contentpic.twitter.com/HPe1SXyUvj
‘சித்தா’ வருகிற செப்.28 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

15 நாடுகளில் அதிகம் பார்க்கப்படும் படமான கட்டா குஸ்தி - 2?
புறங்கூறிப் பொய்யாக வாழ்வதைவிட இறப்பதே மேல்! எக்ஸ் பதிவில் யாரைச் சொல்கிறார் நிவேதா பெத்துராஜ்?

உதயநிதி ஸ்டாலின் கைது: சேலத்தில் திமுகவினர் சாலை மறியல்!

நீதிக் கதைகள்! கற்பது என்பது கற்பவரின் ஆர்வத்தைப் பொறுத்தது!
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK



