இது கேவலமான செயல்: சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி திருமணம் செய்துகொண்டது போல் புகைப்படங்களைப் எடிட் செய்து வதந்திகளைக் கிளப்பியதால் இதுகுறித்து வேதனையாக பதிவிட்டுள்ளார்.
இது கேவலமான செயல்: சாய் பல்லவி

தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சாய் பல்லவி. தற்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘எஸ்கே 21’ படத்தில் நடித்து வருகிறார். 

இப்படத்தின் பூஜையின்போது அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்திருந்தார். அதில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, சாய் பல்லவியின் அருகில் மாலை அணிந்தபடி இருந்தார். 

இதனை தனியாக பிரித்து எடிட் செய்து சாய் பல்லவிக்கும் ராஜ்குமாருக்கும் திருமணம் ஆனதைப்போல் சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வந்தனர்.

இந்நிலையில், சாய் பல்லவி இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நான் வதந்திகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால், அது குடும்ப நண்பர்களையும் உள்ளடக்கியிருப்பதால் பேச வேண்டியுள்ளது. படத்தின் பூஜையின் போது எடுத்த புகைப்படத்தை எடிட் செய்து வேண்டுமென்றே பரப்புகிறார்கள். என் பணியின் அறிவிப்புகளை தெரிவிக்கும் வேளையில் இதுபோன்ற தேவையற்ற வேலைகளுக்கு விளக்கமளிப்பது வருத்தமளிக்கிறது. இது மாதிரியான அசௌகரியத்தை ஏற்படுத்துவது முற்றிலும் கேவலமானது” எனக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com