இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

லியோவுடன் மோதுகிறதா?: வெளியானது துருவ நட்சத்திரம் டிரைலர், ரிலீஸ் தேதி!  

துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மேலும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. 

Published On :

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் டீசர் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் ரிது வர்மா, ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ராதிகா, விநாயகன், திவ்ய தர்ஷினி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

Story image

லியோ படத்துடன் வெளியாகுமென தகவல் வெளியாகி இருந்த நிலையில் படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.