முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

நடிகர் மம்மூட்டியின் புதிய புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான மம்மூட்டி, சமீப காலமாக சிறந்த படங்களில் நடித்து வருகிறார். தயாரிப்பாளராகவும் நல்ல கதையம்சமுள்ள படங்களைத் தயாரித்து கவனம் ஈர்த்துள்ளார்.

இறுதியாக, மம்மூட்டி நடித்து வெளியான பிரம்மயுகம் உலகளவில் ரூ.65 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. விரைவில், டர்போ வெளியாகிறது.

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!
அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் தன் புதிய தோற்ற புகைப்படத்தை மம்மூட்டி பதிவேற்றியுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

காரணம், புகைப்படத்தில் நிற்பவருக்கு 72 வயது என்றால் யார்தான் நம்புவார்கள்? மம்மூட்டியின் வயதிலிருக்கும் நடிகர்கள் பலரும் முதுமையான தோற்றத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது மம்மூட்டி மட்டும் இன்றும் 50 வயது தோற்றத்திலேயே இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இப்படத்தைப் பார்த்த பல சினிமா பிரபலங்களும் வாய் பிளக்கும் நிலைக்குச் சென்றிருக்கிறார்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com