இணையத்தில் வைரலாகும் சிங்கப்பூர் சலூன் படத்தின் பாடல்!

சிங்கப்பூர் சலூன் படத்தின் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இணையத்தில் வைரலாகும் சிங்கப்பூர் சலூன் படத்தின் பாடல்!

சிங்கப்பூர் சலூன் படத்தின் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக இருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி. முன்னணி தமிழ் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் எல்கேஜி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் கதாநாயகனாகவே நடித்து வருகிறார். 

இயக்குநர் கோகுல் இயக்கத்தில் உருவான ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது

ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தில் சத்யராஜ், லால் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய பாடலான பால் வேதியில் என்ற பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்பாடலை உமா தேவி எழுதியுள்ளார். ரவி பாடியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com