லால் சலாம் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்வு நேற்று (பிப்.5) நடைபெற்றது. இதில், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய விஷ்ணு விஷா, “சினிமாவில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன். இதற்கு ஒரு பரிசாகக் கிடைத்ததுதான் லால் சலாம். அதற்கு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு நன்றி. இப்படத்தில் பேசப்பட்ட அரசியலை அவர் தெளிவுடன் இயக்கியிருக்கிறார்.
ரஜினி சார் மிகச்சிறந்த மனிதர். இந்தப் படத்தில் நான் ஒப்பந்தமாகும்போது என் முன்னாள் மனைவி ரஜினியை செல்போனில் அழைத்தவர், ‘லால் சலாம் என்கிற படத்தில் நடிக்க இருக்கிறேன். அதில், விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார். நான் நடிப்பதில் உனக்கு சம்மதமா’ எனக் கேட்டிருக்கிறார். இதை, அவர் (முன்னாள் மனைவி) என்னிடம் சொன்னார். என் முன்னாள் மனைவி, ரஜினி சாரின் நண்பரின் மகள். அதனால், ஒரு வார்த்தை கேட்டுவிடலாம் என பெரிய மனதுடன் ரஜினி சார் நடந்துகொண்டார். லால் சலாமால் நல்ல நட்புகள் கிடைத்தன. இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும். என் திரைப்பட வெளியீட்டில் முதல் முறையாக நிம்மதியாக தூங்கி, முதல்நாள் திரையரங்கம் செல்லப்போகிறேன்.
இதையும் படிக்க: ’இதனால் நிறைய இழந்துவிட்டேன்..’: விக்ராந்த்
சில மாதங்களுக்கு முன் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்வதாக எழுந்த புரளியில் நான் இந்தியாவும் பாரத்தும் ஒன்றுதான் என நினைத்து பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தேன். ஆனால், இதைக் கண்ட பலரும் என்னைக் கடுமையாக விமர்சனம் செய்தனர். உண்மையில், எனக்கு அரசியல் அறிவு பூஜ்யம்தான். இந்திய குடிமகனாக அது தவறாக எனக்குத் தெரியவில்லை. இதனால், என்னை இந்திய எதிர்ப்பாளராக மாற்றிவிட்டார்கள். அவ்வளவு வெறுப்பு. எனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக பிறரை ஒதுக்குவது சரியல்ல. இப்படம், அந்த வெறுப்பு இருக்கக் கூடாது என்பதைத்தான் பேசுகிறது.” எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

