‘இந்தியன் 2’ உரிமத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி, ஓடிடி!

இந்தியன் 2 திரைப்படத்தின் தொலைக்காட்சி, ஓடிடி உரிமத்தை பிரபல நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.
‘இந்தியன் 2’ உரிமத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி, ஓடிடி!

இந்தியன் 2 திரைப்படத்தின் தொலைக்காட்சி, ஓடிடி உரிமத்தை பிரபல நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தியன் 2 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெளியீட்டிற்கு காலதாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சியும், ஓடிடி உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமும் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com