திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளியான அயலான் படத்துக்கு ரஹ்மான்தான் இசையமைத்துள்ளார். அடுத்து வெளியாகவுள்ள லால் சலாம் படத்துக்கும் இசையமைத்துள்ளார்.
துபையில் ரசிகை ஒருவர் காரில் அமர்ந்திருக்கும் ரஹ்மானிடம் வந்தே மாதரம் பாடலை பாடிக் காட்ட அனுமதி கேட்பார். ரஹ்மானும் சம்மதிக்க அவர் சிறப்பாக பாடிக்காட்டுவார். ரஹ்மானும் அதை விடியோவாக படம் பிடித்துள்ளார். இந்த விடியோக்கள் சமூக வலைதளங்களில் வைராகியுள்ளது.
துபையில் பிறந்த இந்தோனோஷியாவைச் சேர்ந்த இந்தப் பாடகி செலினெடி மாதாஹரி தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த விடியோவை பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இவர் ஏற்கனவே, நான்கு நாள்களுக்கு முன்பாக அயலான் பட புரமோஷன் அன்று நடிகர் சிவகார்த்திகேயனுடனும் தமிழ்ப் பாடலை பாடி விடியோவினை பகிர்ந்துள்ளார்.
பாடல்களுக்காக பல விருதுகள் வாங்கியுள்ள புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது தமிழ், இந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.