ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
1மாரீசன்
நடிகர்கள் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் வெளியான திரைப்படம் மாரீசன். சஸ்பென்ஸ் திரில்லராக உருவான இப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்கியிருந்தார்.
மாரீசன் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நாளை(ஆக. 22) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
2தலைவன் தலைவி

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மெனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் கடந்த ஜூலை 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், அமேசான் பிரைமில் நாளை வெளியாகிறது.
3ஹரி ஹர வீர மல்லு

பவன் கல்யாண் நடித்து வெளியான ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
பாபி தியோல், நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள, இப்படத்துக்கு இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைத்துள்ளார்.
4கோதப்பள்ளிலோ ஒகப்புடு

ராணா டகுபதி தயாரிப்பில், மனோஜ் சந்திரா நடிப்பில் உருவான நகைச்சுவைத் திரைப்படமான கோதப்பள்ளிலோ ஒகப்புடு.
இந்தத் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் நாளை வெளியாகிறது.
5பேரன்பும் பெருங்கோபமும்

இயக்குநர் தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் நாயகனாக நடித்திருக்கும் படம், பேரன்பும் பெருங்கோபமும். இந்தப் படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
6எப்1

ஜோசப் கொசின்ஸ்கி இயக்கத்தில், பிராட் பிட் நடிப்பில் உருவான திரைப்படம் எஃப் 1, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் நாளை வெளியாகிறது.
7மிஷன் இம்பாசிபிள் ஃபைனல் ரெக்கனிங்

டாக் குரூஸ் நடிப்பில் வெளியான ஹாலிவுட் திரைப்படமான மிஷன் இம்பாசிபிள் ஃபைனல் ரெக்கனிங் படத்தை, அமேசான் ப்ரைம் ஓடிடியில் பார்க்கலாம்.
8 கடந்த வார ஓடிடியில்
இந்தப் படங்கள் அல்லாமல் கடந்த வாரம் வெளியான குட் டே திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும், அஃகேனம் படத்தை ஆஹா தமிழ் ஓடிடியிலும் காணலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








