இந்த வாரம் ஓடிடியில்... பட்டய கிளப்பும் படங்கள்!

இந்த வார ஓடிடி வெளியீடு தொடர்பாக....
இந்த வாரம் ஓடிடியில்... பட்டய கிளப்பும் படங்கள்!
1.

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

2. காந்தி கண்ணாடி

நடிகர் பாலா, இயக்குநர் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தி கண்ணாடி.

இந்தத் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

3. ராம்போ

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவான ராம்போ திரைப்படம் அக். 10 ஆம் தேதி நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகிறது.

இதில், தன்யா ரவிச்சந்திரன், அபிராமி, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

4. மிராய்

கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் வெளியான மிராய் படத்தில் தேஜா சஜ்ஜா, ரித்திகா நாயக், மனோஜ் மஞ்சு, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மிராய் படம் ஜியோ ஹாட் ஸ்டாரில் வரும் அக். 10 ஆம் தேதி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியாகிறது.

5. வேடுவன்

நடிகர் கண்ணா ரவி நடித்துள்ள புதிய இணையத் தொடர் வேடுவன். இந்த இணையத் தொடர் ஜீ5 ஓடிடியில் வரும் அக்.10ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

ஸ்ரீநிதி தயாரித்துள்ள இந்தத் தொடரை இயக்குநர் பவன் இயக்கியுள்ளார். சஞ்சீவ், ஐஸ்வர்யா ரகுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

6. பாம்

Bomb film poster. And this film release in september.
பாம் படத்தின் போஸ்டர். படம்: எக்ஸ் / சக்தி ஃபிலிம் ஃபேக்டரி

விஷால் வெங்கட் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸின் நடிப்பில் வெளியான பாம், ஆஹா தமிழ் ஓடிடியில் வரும் அக். 10 வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்படத்தில் நடிகர்கள் காளி வெங்கட், நாசர், சிங்கம்புலி, பாலசரவணன், டி.எஸ்.கே, ஷிவாத்மிகா ராஜசேகர், அபிராமி ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

7. வார் - 2

நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான வார் - 2 திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை(அக். 9) வெளியாகிறது.

இப்படம் யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் எடுக்கப்பட்டது. நாயகியாக கியாரா அத்வானி நடித்துள்ளார்.

8. கடந்த வார ஓடிடி

Sivakarthikeyan in the movie Madarasi.
மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன். படம்: எக்ஸ் / ஸ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ்.

இப்படங்கள் அல்லாமல் கடந்த வாரம் வெளியான மதராஸி திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியிலும், லிட்டில் ஹார்ட்ஸ் படம் ஈடிவி வின் ஓடிடி தளத்திலும், சாகசம் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும் பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com