ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனான விஷ்ணு மஞ்சு நாயகனாக நடித்த ‘கண்ணப்பா’ திரைப்படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் கௌதமன் கணபதி இயக்கத்தில் நடிகர் தர்ஷன் நாயகனாக நடித்த ‘சரண்டர்’ திரைப்படம், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
சைஜூ குருப் நடிப்பில் ராகுல் ரிஜி நாயர் இயக்கத்தில் வெளியான மலையாள மொழிப்படமான ஃபிளாஸ்க், மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
சைஜூ ஸ்ரீதரன் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிப்பில் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஃபுட்டேஜ். இந்தத் திரைப்படம் நாளை(செப். 5) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
கன்னடத்தில் ஹாரர் காமெடி கதையாக எடுக்கப்பட்டு வெற்றிப்படமான சூ ஃப்ரம் சோ, ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நாளை (செப்.5) தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளதாம்.
இந்தப் படங்கள் அல்லாமல் கடந்த வாரம் வெளியான லவ் மேரேஜ் திரைப்படம் அமேசான் பிரைமிலும் கிங்டம் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் மாயக்கூத்து திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும் பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.