ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
வசந்த் ரவி நடிப்பில் வெளியான இந்திரா திரைப்படம் நாளை (செப். 19) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிஸ் நந்தா இயக்கத்தில் உருவான இப்படத்தில் நடிகர்கள் கல்யாண், சுனில், மெஹ்ரீன் பிர்சாதா, அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஃபேண்டெசி கலந்த ஹாரர் காமெடி திரைப்படமாக வெளியான திரைப்படம் ஹவுஸ் மேட்ஸ். இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில், நடிகர் தர்ஷன் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் காளி வெங்கட் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
போலீஸ் போலீஸ் இணையத் தொடர் நாளை ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.
போலீஸ் போலீஸ் இணையத் தொடரில் பிரதான பாத்திரங்களில் மிர்ச்சி செந்தில், ஜெயசீலன் தங்கவேல் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் ஷபானா, சுஜிதா, வின்செண்ட் ராய், சத்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
நடிகை இனியா, சோனியா அகர்வால், ஐஸ்வர்யா தத்தா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள ஷ்ஷ்ஷ் இணையத் தொடரின் இரண்டாம் பாகம் நாளை வெளியாகிறது.
இப்படங்கள் அல்லாமல் பட்டர் ஜாம் திரைப்படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும் மீஷா திரைப்படம் ஆஹா தமிழ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளங்களிலும் கூலி படம் அமேசான் பிரைம் ஓடிடியிலும் காணக் கிடைக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.