ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
சத்தியன் அந்திகாட் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான ஹிருதயபூர்வம் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் நாளை(செப். 26) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபகத் ஃபாசில், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் நடிப்பில் வெளியான ஓடும் குதிரை சாடும் குதிரை திரைப்படம், நாளை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
அஸ்வின் குமார் இயக்கத்தில் ஹோம்பலே நிறுவனம் தயாரித்த இதிகாச படமான மஹா அமதார் நரசிம்மா படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.
மடப்பள்ளி என்ற பெயரில் வெளியான மலையாள மொழிப்படம், சுமதி வளவு என்ற பெயரில் தமிழில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் அர்ஜுன் அசோகன், மாளவிகா மனோஜ், சித்தார்த் பரதன் நடித்துள்ளனர். ஜீ5 ஓடிடி தளத்தில் தமிழ், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் நாளை வெளியாகிறது.
வெங்கடேஷ் நிம்மலபுடி இயக்கத்தில் விருத்தி வகானி, ஸ்ரீதேவி விஜயகுமார் ஆகியோர் நடிப்பில் வெளியான சுந்தர காண்டா திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
தெலுங்கு மொழியில் நல்ல வரவேற்பைப் பெற்ற மேஹலு செப்பின பிரேம கதா (Meghalu Cheppina Prema Katha) திரைப்படத்தை நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.
இப்படங்கள் அல்லாமல் கடந்த வாரம் வெளியான இந்திரா திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும் ஹவுஸ் மேட்ஸ் திரைப்படத்தை ஜீ5 ஓடிடியிலும் காணலாம்.
இதையும் படிக்க: ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் கேம் டிரைலர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.