
சூப்பர் ஹிட் படங்கள் முதல் சுமார் படங்கள் வரை சினிமாவுக்கு ஆன்லைனில் ஆதரவு அமோகம். தியேட்டர்களை விட இணையதளங்களில் சினிமா பார்ப்பவர்களின் எண்ணிக்கை சில பல கோடிகளைத் தாண்டிக் கொண்டிருக்க, இணையதளங்களுக்காகவே படம் எடுக்கும் கலாசாரம் தொடங்கிவிட்டது. 'வெப் சீரிஸ்' என அடையாளப்படுத்தப்படும் இந்த வகைபடங்கள் தான் இப்போது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனால் சினிமாவுக்கு அடுத்தபடியாக வெப் சீரிஸ்களில் நடிப்பதை திரை நட்சத்திரங்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
முதல் கட்டத்திலேயே இதில் நுழையும் ஆர்வம் திரை நட்சத்திரங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பாணியில் மாதவன் நடித்து வெளியான வெப் சீரிஸ் ஒன்று பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து ஆண்ட்ரியா, காயத்ரி, பிரியாமணி, சுனைனா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் இதில் நடித்து வருகின்றனர். இந்த வரிசையில் அடுத்து இடம் பிடிக்க வருகிறார் பிரியா பவானி சங்கர். தற்போது எஸ்.ஜே.சூர்யாவுடன் 'மான்ஸ்டர்', அதர்வாவுடன் 'குருதி ஆட்டம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர், வெப்சீரிஸில் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் கருணாகரன், ரோபோ சங்கர் போன்றோரும் நடிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.