பெல்லி நடனத்தை  ஆய்வு செய்த  பாலிவுட் நடிகை  ரிச்சா சட்டா!

பெல்லி நடனத்தை  ஆய்வு செய்த  பாலிவுட் நடிகை  ரிச்சா சட்டா, தானும் அதை கற்றுணர்ந்தார்
பெல்லி நடனத்தை  ஆய்வு செய்த  பாலிவுட் நடிகை  ரிச்சா சட்டா!
Published on
Updated on
2 min read

ஹகஜகஸ்தான் நாட்டு பழங்குடியினரின் பாரம்

பெல்லி நடனத்தை  ஆய்வு செய்த  பாலிவுட் நடிகை  ரிச்சா சட்டா, தானும் அதை கற்றுணர்ந்ததோடு,  'ஷகிலா'  வரலாற்று  படத்தில் ஒரு காட்சியில் ஆடி தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறாராம். 'பெல்லி நடனத்தில் வயிற்றுப் பகுதியை தாளத்திற்கேற்ப அசைப்பதுதான் மிகவும் முக்கியம். நான் ஆடியுள்ள அந்த நடன காட்சியைப்  பார்ப்பதற்காகவே 'ஷகிலா' படத்தை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்' என்று கூறியுள்ளார் ரிச்சா சட்டா.

மீரா நாயர் இயக்கத்தில் விக்ரம் சேத் நாவல்!

1994-ஆம் ஆண்டு வெளியாகி அதிகளவில் விற்பனையான எழுத்தாளர் விக்ரம் சேத்தின்  'சூட்டபிள் பாய்'  நாவலை,  இயக்குநர்  மீரா நாயர், பிபிசி சீரியலுக்காக ஆறு ஒரு மணி நேர எபிசோடுகளை இயக்கவுள்ளார். தபு, ஷிபாலிஷா, ரசிகா துகல், நஸ்ருதீன்ஷா உள்பட பலர் இந்த தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். ஆனால், கதையில் முக்கியத்துவம் பெற்ற லதா என்ற கதாபாத்திரத்திற்கான நடிகையை மீரா நாயர் இன்னும் தேர்வு செய்யவில்லையாம்.

புத்தக விருது பெற்ற பெண் எழுத்தாளர்!

லண்டனில் உள்ள  நைன் டாட்ஸ்  அறக்கட்டளை,  சமூக  பிரச்னைகளை புதிய கண்ணோட்டத்தில் எழுத்தாளர்கள் உருவாக்க வேண்டுமென்பதற்காக வைக்கும் கட்டுரை போட்டியில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஏழு மாதத்திற்குள் அதே கருத்தை வைத்து புத்தகமாக எழுதுபவர்களுக்கு பரிசுத் தொகை ரூ.69.82 லட்சம் வழங்குகிறது. இந்தப் பரிசுத் தொகை மும்பையை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆன்னி ஜைதி எழுதிய  'பிரெட், சிமெண்ட், காக்டஸ்' என்ற புத்தகத்திற்கு கிடைத்துள்ளது. பகுதி நேர எழுத்தாளரான ஆன்னி ஜைதி ஏற்கெனவே  பல விருதுகளைப்  பெற்றுள்ளார். பரிசு பெற்ற  இவரது புத்தகத்தை அடுத்த ஆண்டில்  கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்  பிரசுரிக்கவுள்ளது.

ஹாலிவுட்டில் டிம்பிள்!  

நீண்ட  காலமாக  லாஸ் ஏஞ்சல்ஸில்  தங்கியுள்ள  முன்னாள்  பாலிவுட்  நடிகை டிம்பிள்  கபாடியா, ஹாலிவுட் தயாரிப்பாளர்  கிரிஸ்டோபர் நோவன் தயாரிக்கும்  'பாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் -7' என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். 'இப்படத்தின் படப்பிடிப்பு ஏழு நாடுகளில் நடக்கவுள்ளது. திறமையும் அழகும் உள்ளவர்கள்  நடிப்பதற்கு வயது தடையல்ல. டிம்பிள் கபாடியா திரும்ப நடிக்க வந்திருப்பது மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாகும்'' என்று அவரை பாராட்டி  பாலிவுட்  நடிக- நடிகைகள் கருத்து  தெரிவித்துள்ளனர்.

தமிழுக்கு வரும் நிதி அகர்வால்!

இந்தியில்  டைகர்  ஷெராப்புடன்  'முன்னா மைக்கேல்'  என்ற படத்தில் நடிக்கும் நிதி அகர்வால், ஏற்கெனவே  தெலுங்கில்  இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ஜெயம் ரவியின் 25-ஆவது  படத்தில் முதன்முறையாக தமிழில்  நிதி அகர்வால் அறிமுகமாகிறார்.   கீர்த்தி சுரேஷ்  நடிப்பதாக முதலில் வந்த தகவல்  தவறானது. 'கதைகேற்ப நல்ல நாகரீகமான படித்தப் பெண் தேவை என்பதால் நிதி அகர்வாலை தேர்வு  செய்தேன்' என்று இயக்குநர் லட்சுமணன் கூறியுள்ளார். இந்தப் படத்தில்  ஜெயம் ரவி ஒரு விவசாயியாக நடிக்க, அவரது மாமியார் சுஜாதா  விஜயகுமார்  படத்தை தயாரிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com