அமைதி, வளர்ச்சியை நிலைநாட்டுவேன்: டாக்டர் கிருஷ்ணசாமி

தான் தென்காசி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டால், இப் பகுதியின் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய தமிழகம்
அமைதி, வளர்ச்சியை நிலைநாட்டுவேன்: டாக்டர் கிருஷ்ணசாமி
Updated on
1 min read

தான் தென்காசி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டால், இப் பகுதியின் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் திங்கள்கிழமை இரவு தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் மல்லி கு.ஆறுமுகம் வரவேற்றார்.வேட்பாளராக போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி அப்போது பேசுகையில் கூறியதாவது:

ஓட்டப்பிடாரம் தொகுதியிலிருந்து சட்டப் பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அங்கு அனைத்து சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு பணிகளை நிறைவேற்றியுள்ளேன். தென்காசி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டால், இப் பகுதியில் அதைவிட 100 மடங்கு அமைதி, வளர்ச்சியை நிலைநாட்ட பாடுபடுவேன். மேற்குத் தொடர்ச்சி மலையடிவராத்தில் தென்காசி மக்களவைத் தொகுதி உள்ளது. இப் பகுதியில் 30 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் போய் சேருகிறது. இத் தொகுதி கடுமையான வறட்சியின் பிடியில் உள்ளது. நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசி விடுவுகாலம் ஏற்படுத்துவேன். டாக்டர் கிருஷ்ணசாமி போராடுவார், வாதாடுவார் என்று கட்சித் தொண்டர்கள் மக்களிடம் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். திருமங்கலம்-செங்கோட்டை இடையிலான இரு வழிச் சாலையை 4 வழிச் சாலையாகவும், புறவழிச் சாலை ஏற்படுத்தவும் செய்வேன்.

இத் தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகள் நம்பிக்கையுடன் தேர்தலை சந்திக்கின்றன. இக் கூட்டணி நிரந்தரமான கூட்டணிக்கு அடித்தளமாக அமையும்.தேர்தல் பணியில் தி.மு.க. இடைநிலை ஆசிரியரோ, பட்டதாரி ஆசிரியரோ இல்லை. பல்கலைக்கழகம். எனவே ஒன்றிய, கிளைக்கழகங்களில் உள்ளவர்கள் நீங்களே ஆங்காங்கே புதிய யுக்திகளை அமைத்து வெற்றிக்காக பாடுபடவேண்டும் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர் ஜி.ஜி.அய்யாவுபாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் ஜான்ராஜ், தி.மு.க. பிரமுகர்கள் குன்னூர் அ.சீனிவாசன், லிங்கசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com