திரையிசைப் பாடல்களில் அழியாப்புகழ் கொண்ட தேசபக்தி மிக்க பாடல்கள்...

இந்தியாவில் தேசபக்தியை வளர்க்க, தேசத் தலைவர்களின், சுதந்திரப் போராட்ட வீரர்களின்  தீரமிக்க விடுதலைக் கருத்துக்களை மக்கள் மனதில் பதிய வைக்க சுதந்திரத்துக்கு முன்பிருந்தே திரைப்படங்களும், நாடகங்களும்,
திரையிசைப் பாடல்களில் அழியாப்புகழ் கொண்ட தேசபக்தி மிக்க பாடல்கள்...
Published on
Updated on
1 min read

இந்தியாவில் தேசபக்தியை வளர்க்க, தேசத் தலைவர்களின், சுதந்திரப் போராட்ட வீரர்களின்  தீரமிக்க விடுதலைக் கருத்துக்களை மக்கள் மனதில் பதிய வைக்க சுதந்திரத்துக்கு முன்பிருந்தே திரைப்படங்களும், நாடகங்களும், திரையிசைப் பாடல்களும் முக்கிய பங்காற்றி வந்தன. அந்த வகையில் இந்நாள் வரையிலும் என் மனதில் தேச பக்தி என்றதும் நினைவுக்கு வரும் சில திரைப்படப் பாடல்களை பகிர்ந்திருக்கிறேன். தினமணி வாசகர்களும் அவரவர்க்கு ஞாபகமிருக்கக் கூடியஎழுச்சி மிக்க  தேச பக்திப் பாடல்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

ரோஜா திரைப்படத்தின் தமிழா... தமிழா பாடல்...

தமிழா தமிழா நாடும் நம் நாடே பாடல் இன்றளவும் மிகச்சிறந்த தேச பக்திப் பாடலாகக் கருதப்பட்டு பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி இசை நிகழ்ச்சிகளிலும் அரசு சுதந்திர மற்றும் குடியரசு தினவிழாக் கொண்டாட்டங்களின் போதும் பாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பாரத விலாஸ் திரைப்படத்தின் ‘இந்திய நாடு என் வீடு’ பாடல்!

ஜெய் ஹிந்த் திரைப்படத்தின் டைட்டில் பாடல்...

தாயின் மணிக்கொடி, தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த் டைட்டில் பாடலில் குடியரசு தினவிழா அணிவகுப்பை தேச பக்தி பொங்கப் படமாக்கி இருப்பார்கள். இந்தப் பாடலை அவரவர் தாய்மொழியில் கேட்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும் தேசபக்தி ஊற்றெடுத்தால் வியப்பில்லை.

கப்பலோட்டிய தமிழனின் ‘வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம்’ பாடல்...

கை கொடுத்த தெய்வம் திரைப்படத்தில் இடம் பெறும்   'சிந்துநதியின் மிசை நிலவினிலே' பாடல்...

பள்ளிக் காலங்களில் தேசபக்திப் பாடல்கள் வரிசையில் இந்தப் பாடலைப் பாடாதோர் இல்லை எனலாம். அந்த அளவுக்கு நம் நாட்டின் ஒருமைப்பாட்டை மிக அழகான வரிகளில் அசலாக விவரித்த மகாகவிக்கு என்றுமில்லை இறப்பு!

இந்திரா திரைப்படத்தில் வரும் ‘அச்சம் அச்சமில்லை இன் அடிமை எண்ணம் இல்லை’ பாடல்...

ஏ ஆர் ரஹ்மானின் 'வந்தே மாதரம்' பாடல்...

இந்தியன் திரைப்படத்தின்  ‘கப்பலேறிப் போயாச்சு சுத்தமான நாடாச்சு’ பாடல்...

ஐ லவ் மை இந்தியா இந்தித் திரைப்படப் பாடல்...

முகமது இக்பால் எழுதிய 'சாரே  ஜகான் சே அச்சா’ பாடல் மொழிப்பாகுபாடின்றி பல திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளது...

 'சாரே  ஜகான் சே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா ஹமாரா' என்ற உருதுப்  பாடலே காந்தி  தேசிய கீதமாக பரிந்துரைத்த பாடல், விடுதலை இந்தியாவின் பாராளுமன்றத்தில்  ஒலித்த முதல் பாடலும் அதுவே.  இஸ்லாமியர் எழுதிய பாடலை இந்துக்கள் ஏற்றுக் கொள்ள மறுக்க, அவர்கள் கூறிய வந்தே மாதரம் பாடல்களுக்கு இஸ்லாமியர் சமய அடிப்படை கூறி மறுக்க இடையில் சசரசம் செய்து கொள்ளும் முயற்சியில் தாகூரின் பாடல் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் ஒரு கூற்று உண்டு. நேருவுக்கும் காந்திக்கும் பிடித்த பாடல், ஆங்கிலேயருக்கு எதிராக எழுச்சியுடன் பாடப்பட்ட பாடல்  'சாரே  ஜகான் சே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா ஹமாரா' பாடல்தான். பின்னர் 1950 இல் வந்ததுதான் தேசிய கீதம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com