விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் என்கிற தெலுங்குப் படத்தில் இணைந்து நடித்தார் ராஷ்மிகா. அந்தப் படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் காவாலா பாடலில் நடித்து அதிக ரசிகர்களிடம் சென்றடைந்தார். 2016-ல் கிரிக் பார்ட்டி என்கிற கன்னடப் படத்தினால் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.
கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துக் கவனம் பெற்றுள்ள நடிகை ராஷ்மிகா, சுல்தான் படத்தினால் தமிழில் அறிமுகமாகியுள்ளார். அப்படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடித்துள்ளார்.
இன்று பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார் ராஷ்மிகா. இதுவரை அவர் நடித்துள்ள படங்களில் அதிக வரவேற்பு பெற்ற பாடல்களின் விடியோக்கள்:
பெலகெட்டு (கிரிக் பார்ட்டி)
இன்கேம் இன்கேம் (கீதா கோவிந்தம்)
வச்சிந்தம்மா (கீதா கோவிந்தம்)
மைண்ட் பிளாக் (சரிலேரு நீக்கெவரு)
ஹீ ஈஸ் சோ கியூட் (சரிலேரு நீக்கெவரு)
டாப் டக்கர் (யுவன் சங்கர் ராஜா இசையமைத்த ஆல்பம்)
சந்தா சந்தா (அஞ்சனி புத்ரா)
யாரையும் இவ்ளோ அழகா (சுல்தான்)