அரசும் மக்களும்...

அண்மையில் ஊடகங்களில் ஒரு செய்தி வெளிவந்தது. பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளிடம் தாங்கள் முன்வைக்கும் விசாரணைகளுக்கு உரிய நேரத்தில் பதிலளிக்கப்படுவதில்லை
Updated on
2 min read

அண்மையில் ஊடகங்களில் ஒரு செய்தி வெளிவந்தது. பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளிடம் தாங்கள் முன்வைக்கும் விசாரணைகளுக்கு உரிய நேரத்தில் பதிலளிக்கப்படுவதில்லை என்று சில நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து புகார் வந்துள்ளது. எனவே, எம்.பி.க்களின் கேள்விகளுக்கு கடிதம் கிடைக்கப்பெற்ற 15 தினங்களுக்குள் பதிலளிக்குமாறு தங்கள் துறையினரை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அறிவுறுத்த வேண்டும்.
கேள்விகளுக்கு, உடனடியாக பதிலளிக்க முடியாவிட்டாலும், எப்போது பதில் அளிக்க முடியும் என்ற விவரத்தையாவது, சம்பந்தப்பட்ட எம்.பி.க்களுக்கு அரசுத்துறையினர் தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தங்கள் விசாரணைகள் கவனிக்கப்படுகின்றன என்பது தெரியும் என்பதுதான் அந்த செய்தி.
சட்டத்தை இயற்றக் கூடிய இடத்தில இருப்பவர்கள் - அரசாங்கத்தை உருவாக்கவும் - நடத்தவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் - அரசைக் கேள்வி கேட்கவும் உரிமை பெற்றவர்கள் - மக்களின் பிரதிநிதிகளின் நிலையே இது எனும்போது, சாதாரண பிரஜையின் நிலையை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடிய செய்தி அல்ல இது. நிர்வாகம் எந்த அளவுக்கு அலட்சியம் - மற்றும் உதாசீனப் போக்குடன் - தங்களை யாரும் எதுவும் செய்து விட முடியாது என்ற உணர்வுடனும் - மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்கு உழைக்க இருக்கிறோம் என்ற நினைவே இல்லாதும், இருப்பதற்கான அடையாளமே இது.
ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர், அப்பள்ளியின் மாணவர்கள் மற்றும் இதர ஆசிரியர்களின் செயல்பாட்டுக்குப் பொறுப்பாகிறார். பள்ளியின் நிர்வாகத்துக்கு பதில் சொல்லும் கடமைப் பட்டிருக்கிறார்.
மிக உயர்ந்த பதவியில் இருப்பதனால், அவர் நான் இவர்களுக்கு பதில் சொல்ல முடியாது என சொல்ல முடியாது.
பொறுப்பு வகிக்கும் எல்லோருக்கும் ஒரு பொறுப்புடைமை - அஇஇஞமசபஅஆஐகஐபவ - இருக்கிறது. அதை எவரும் தவிர்க்க இயலாது.
இப்படி இருக்க, சாதாரண மனிதன், தான் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளிடமும், தனது வரிப்பணத்தில் ஊதியம் பெரும் நிர்வாகத்திடமும் எவ்வளவு அல்லல் படுகின்றான் என்பதனை பார்க்கிறோம். இந்த இரு சாராரும் நாம் மக்களுக்கு கடமைப்பட்டவர்கள் - பொறுப்புடைமை உடையவர்கள் எனும் உணர்வற்று இருப்பதனை பார்க்கிறோம்.
நாம், நமது சார்பாக செயல்படுவதற்காக பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கின்றோம். அவர்களுக்கு, நம் சார்பாகவும் - நமக்காகவும் செயல் படுவதற்கான சில அதிகப்படியான அதிகாரத்தினை - உரிமைகளை வழங்குகின்றோம்.
ஆனால், உரிமையைப் பெற்றவர்கள் தங்களை முதல் தரக் குடிமக்கள் என்றும் ஏனையோர் இரண்டாம் தரக் குடிமக்கள் என்ற உணர்வை பெறுவது வினோதமான ஒன்று. இத்தகைய மனோபாவம், நமது வரிப்பணத்தில் ஊதியம் பெறும் நிர்வாகத்திடமும் இருப்பதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.
நமது பிரதமர், இந்தியாவின் பிரதம சேவகர் என தம்மை அறிவித்துக் கொண்டார். ஆனால், எத்தனை அதிகாரிகள் அந்த உணர்வோடு மக்களுக்கு பணிசெய்கிறார்கள்.
அவர்கள், மக்களின் எஜமானர்கள் என்று மனோநிலையில் இருந்து மாற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது.
இன்று எம்.பி.க்களுக்கு ஏற்படும் நிலையை பார்க்கிறோம் சாதாரண மனிதன் தமக்காக செயல் பட வேண்டிய நிர்வாகத்திடம் இருந்து ஒரு தகவலைப் பெறுவதற்கு, தகவல் அறியும் உரிமை சட்டம் என்ற ஒன்றை பிரயோகிக்கும் நிலை கூட எழுகிறது.
அந்த அஸ்திரம்கூட, பல சமயங்களில், வெகு அற்ப காரணங்களைக் காட்டி மறுக்கப்படுவதையும் பார்க்கிறோம் - அனுபவிக்கிறோம்.
எம்.பி.க்கள் தகவலைப் பெறுவதற்கே இவ்வளவு சிரமம் என்றால், ஒரு அரசு அலுவலகத்துக்குள் சென்று ஒரு சான்றிதழையோ அல்லது ஒரு அரசாங்க ஒப்புதû லயோ, ஒரு சாதாரண மனிதன் சாமான்யமாக பெற்று விடமுடியுமா?
ஓய்வூதியம் பெற முதியோர் படும் தொல்லைகள், தொழில் முனைவோர் படும் இன்னல்கள் ஏராளம்.
இந்த நிலைக்கு பல காரணங்கள் இருக்கலாம். முக்கியமான ஒரு காரணம், நாம் பிரிட்டிஷாரிடம் இருந்து சுவீகரித்த நிர்வாக அமைப்புதான். பிரிட்டிஷ்காரர்கள் வைத்திருந்த அமைப்பு, இந்திய மக்களுக்கு சேவை செய்யும் அமைப்பு அல்ல - அது பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு விசுவாசமான அமைப்பு. அவர்கள், தங்களது சுய லாபத்துக்காக வைத்திருந்த நிர்வாக அமைப்பு.
அது சிறிதும் மாற்றப்படாத நிலையில் இருப்பதால், இன்றும் நிர்வாகம் மக்களின் எஜமானர்கள் என்ற நினைவோடு செயல்படுவதை காண முடிகிறது.
இந்நேரத்தில், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், ரொனால்டு ரீகன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்கும்போது கூறிய வாசகங்களை நினைவு கூர்வது பொருத்தம் ஆகும்.
"நமது நோக்கம், அரசாங்கத்தை மக்களுடன் இணைந்து செயலாற்ற வைப்பது - மக்களை மீறி செயல்பட வைப்பதல்ல.
அரசாங்கம் மக்கள் பக்கத்திலே நின்று செயல்பட வேண்டும் என்பதே - மக்கள் முதுகின் மீது சவாரி செய்வதல்ல' என்று கூறினார் அவர்.
நம் நாட்டுக்கு மிகவும் பொருத்தமான வார்த்தைகள் இவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com