தண்ணீர் நமது உயிர்நீர்

ரியோடி ஜெனிரோவில் 1992-இல் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் முன்னேற்றம் பற்றிய பன்னாட்டு ஆலோசனைக் கூட்டத்தில் ஆண்டிற்கு ஒரு நாள் உலகின்

ரியோடி ஜெனிரோவில் 1992-இல் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் முன்னேற்றம் பற்றிய பன்னாட்டு ஆலோசனைக் கூட்டத்தில் ஆண்டிற்கு ஒரு நாள் உலகின் அனைத்து நாடுகளும் நீர் பற்றிய புதிய தகவல்களை பகிர்ந்து கொண்டு, நீர் வளத்தை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், பன்னாட்டு பொதுச் சபை (United Nations General Assembly) மார்ச் 22-ஐ உலக தண்ணீர் நாளாக கொண்டாட பரிந்துரைத்தது. அதன்படி முதலாவது உலக தண்ணீர் நாள் மார்ச் 22, 1993-இல் கொண்டாடப்பட்டு, இந்த ஆண்டு 25-ஆவது உலக தண்ணீர் நாள் கொண்டாடப்படுகிறது.
யுனெஸ்கோவின் புள்ளி விவரப்படி, பூமியிலுள்ள நீர் முழுவதையும் (கடல் நீரையும் சேர்த்து) அதாவது 1.4 பில்லியன் கியுபிக் கி.மீ. நீரை உலகம் முழுவதும் பரப்பினால் அது பூமியின் மேல் 3 கி.மீ. உயரம் பரவும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த நீரில் 97.4% கடல் சார்ந்த உப்பு நீராகும். அடுத்துள்ள 2.6% நல்ல நீரில் 75% துருவ பனிப்பாறைகளாகவும், 22.6% பூமிக்கு அடியில் சில கி.மீ. ஆழத்தில் பயன்படுத்திக்கொள்ள இயலாத நிலையிலும் உள்ளது.
மீதமுள்ள 2.4% நன்னீரே உலகில் கிடைக்கும் மொத்த நன்னீரின் அளவாகும். இதன் அளவு ஒரு லட்சம் கியுபிக் கிலோ மீட்டர் ஆகும். இதிலும் 60% ஆவியாகிவிடுகிறது. அடுத்துள்ள 40% மட்டுமே உலக மக்களுக்கு பயன்படும் நன்னீராதரமாக உள்ளது.
இந்தியாவின் நீர்வளம் உலக அளவில் 4%. அதாவது 4,000 KM3. இதில் 53% ஆவியாவதாகவும், மீதமுள்ள 47% (1,869 KM3) மட்டுமே நிலநீராகவும் (ள்ன்ழ்ச்ஹஸ்ரீங் ஜ்ஹற்ங்ழ் - 1437 KM3), நிலத்தடி நீராகவும் (ஞ்ழ்ர்ன்ய்க்ஜ்ஹற்ங்ழ் - 432 KM3) கிடைக்கிறது. இந்தியாவில் இந்த நீராதாரத்தில் தற்போது பயன்படுத்தப்படும் அளவு 761 KM3 (40.7) மட்டுமே.
இதிலும், நிலநீரின் பயன்பாடு 411 KM3, நிலத்தடிநீரின் பயன்பாடு 350 KM3, ஆக, பெருமளவு நிலத்தடிநீரையே நாம் பயன்படுத்தி வருகிறோம். எனவே, நில
நீர் மட்டத்தை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இப்படிப்பட்ட சிக்கலான நிலையில் உள்ள, வாழ்வின் முக்கிய ஆதாரமாக விளங்கும் நன்னீரை ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் பேணிக்காக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு தேவை.
அவ்விழிப்புணர்வை இன்றளவும் நாம் பெறவில்லை. அதன் விளைவுதான், தண்ணீருக்கான போராட்ட வாழ்க்கையையே நாம் தொடரவேண்டியுள்ளது.
நில நீர்வளத்தைப் (surface water) பெருக்கினால், நிலத்தடி நீர் வளம் (ground water) தானாகவே மேம்படும். இதுதான் நீராதாரப் பெருக்கத்தின் சூத்திரம் ஆகும்.
இந்தியாவிலுள்ள நிலநீராதாரங்களின் அடிப்படையான பேரணைகளின் மொத்த கொள்ளளவு 1965-இல் 95 KM3. இது 2013-இல் 254 KM3-ஆக 2.7 மடங்கே அதிகரித்துள்ளது.
இதனால், பேரணைகளின் தனி நபர் தலைவீத சராசரி அளவு இந்தியாவில் 190 ங3 (கியுபிக் மீட்டராக) உள்ளது. இதுவே, சீனாவில் 417 ங3, அமெரிக்காவில் 2,404 ங3, ஆஸ்திரேலியாவில் 3,709 ங3, மற்றும் ரஷியாவில் 5,600 ங3 ஆகவும் உள்ளது.
குறிப்பாகக் கூறினால், உலகின் மிகப்பெரிய பேரணையான ஜிம்பாப்வேயின் கரீபா அணையின் கொள்ளளவு 185 KM3. நம் தமிழக மேட்டூர் அணையின் கொள்ளளவு 2.6 KM3. அதாவது, கரீபா அணையின் கொள்ளளவு மேட்டூர் அணையின் கொள்ளளவைப்போல் 71 மடங்காகும்.
வட மாநில கங்கை, பிரம்மபுத்திரா
நதிகளின் நீரைக்கொண்டு மிகப்பெரிய அணைகளை நாமும் உருவாக்கி வளம்பெற முடியும்.
தமிழகத்தின் நிலநீராதாரத்தைப் பொருத்தவரை பேரணைகள், ஏரிகள் என இரு வகைகள் உள்ளன. இதன் மூலம் 24 KM3 நீர்வளம் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில், 76 பேரணைகள் மூலம் 6.1 KM3 நீரும், மற்றுமுள்ள பெரிய, சிரிய வகையான 41,127 ஏரிகள் மூலம் 5.1 KM3 நீரும் சேமிக்க இயலும்.
இவை அனைத்தும் 47% நீர் ஆதாரத்தை சேமிக்க உதவுகிறது. ஆக, மழை காலங்
களில் தமிழகம் பாதியளவு நீரை கடலுக்கு விட்டுவிட்டு வறட்சி பாதிப்பிற்கு உள்ளாகிறது.
இந்த நிலநீர் விரயத்தை தவிர்க்க இரு முக்கிய பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். 1. அனைத்து ஆறுகளிலும் 10-20 கி.மீ.க்கு ஒன்று வீதம் போதுமான உயரத்தில் தடுப்பணைகள் அமைத்து நிலத்தடி நீரைப் பெருக்குதல். 2. மொத்தமுள்ள சிரிய மற்றும் பெரிய அளவிலான 41,127 ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுமையாக தூர்வாரி அவைகளின் முழு கொள்ளளவை ஆண்டு தோறும் உறுதிப்படுத்த வேண்டும்.
தமிழக ஏரிகளின் பதிவு செய்யப்பட்ட மொத்த பாசனப்பரப்பு ஒரு மில்லியன் (10 லட்சம்) ஹெக்டேர். ஆனால், இதில் பாதியளவு மட்டுமே தற்போது பாசனம் பெருகிறது. இதனால், ஆயக்கட்டு கிணறுகளின் நிலத்தடி நீர் வளமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
30-40 ஆண்டுகளுக்கு முன்பு வரை திறம்பட செயல்பட்ட குடிமராமத்து (குடிமக்களல் மேற்கொள்ளப்படும் மராமத்துப்) பணிகள் தற்போது முற்றிலும் மறைந்து விட்டன. அதன் பலனாக அடிக்கடி கடும் வறட்சியை அனுபவித்து வருகிறோம்.
1960-களில் தமிழகம் அதிகபட்ச ஏரிப்பாசனம் பெற்றிருந்தது. 1967-68இல் 9.9 லட்சம் ஹெக்டேர் ஏரிப்பாசனப் பரப்பு பதிவகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில், சென்னை, திருவாரூர், நாகப்பட்டினம், நீலகிரி தவிர மற்ற 28 மாவட்டங்களில் ஏரிகள் உள்ளன. இதில், 14 மாவட்டங்களில் 75 ஏரிகள் உள்ளன.
இந்த 14 மாவட்டங்களையும் ஏரிகளில் முதன்மை மாவட்டங்களாக அறிவித்து ஏரிகளின் மேம்பாட்டில் ஈடுபட்டால் ஏரிப்பாசனம் முழுமை பெறுவதோடு நிலத்தடி நீர் வளமும் பெருகி விவசாயம் தழைக்கும்; நீர் பஞ்சம் நீங்கும்!

நாளை (மார்ச் 22) உலக தண்ணீர் நாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com