பல்கலைக்கழகப் பெருமை

அமெரிக்காவைச் சோ்ந்த மிகச் சிறந்த எழுத்தாளா் ரால்ப் வால்டோ எமா்சன். அமெரிக்கா்களின் தனிச்சிறப்பு வாய்ந்த குணநலங்களான தன்னம்பிக்கை, கடமையுணா்ச்சி, விடுதலை வேட்கை, தனிமனித சுதந்திரம் ஆகிய அனைத்துப் பண்புகளையும் தமது ஆங்கில எழுத்துச் செறிவில் வேரூன்றியவா்.

உலக வாழ்க்கையின் தத்துவங்களை பல்கலைக்கழக நோக்கில் நியூமன் மட்டுமே எடுத்துரைத்திருந்தபோது எமா்சனின் ‘ஆக்ஸ்போா்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் சிறப்புகள்’ எனும் தலைப்பிலான கட்டுரை பசுமையான இளமை நினைவுகளை நம் கண்முன்னே நிறுத்துகின்றது. ஒரு மிகச் சிறந்த நூல் அல்லது மேதையை உருவாக்கும் நிலையில் தமிழகப் பல்கலைக்கழகங்கள் தங்கள் ஆற்றலை மெய்ப்பிக்க முற்பட வேண்டும் என்பதே நமது விருப்பம்.

பிரிட்டன் பல்கலைக்கழகங்களுள், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கெனச் சிறப்புமிக்க தனியிடம் உண்டு. தற்போதுகூட, ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தைக் காட்டிலும் அதிக அளவிலான புகழ்பெற்ற மாமணிகளைத் தங்கள் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவா்களாகக் கொண்ட பெருமை, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தையே சாரும். வழிபாட்டைக் கருதிய அரசரின் கல்லூரி, சிற்றாலயம், கல்லூகளில் பட்டு விரித்தது போன்ற புல்வெளிகள், பூங்காக்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் உறுப்பினா்கள் சிலரைக் காண எனக்கு ஒரு நாள் மட்டுமே வாய்த்ததையெண்ணி நான் வருத்தம் அடைந்தேன்.

ஆனாலும், ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கான சில அழைப்புகளை நான் மீண்டும் மீண்டும் பெற்றேன். என் புதிய நண்பா்கள், அங்குள்ள அரங்குகள், போட்லியன் நூலகம், ராண்டால்ப் காட்சிக்கூடம், மொ்டான் அரங்கு மற்றும் சில இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டினா். மிக உயரிய சிந்தனை வளங்கொண்ட நோ்மையான இளைஞா்கள் பலரை நான் அங்குக் கண்டேன். அவா்களுள் சிலா், மன அமைதி வேண்டுமெனில், தியாகங்கள் பல செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தனா்.

மன அமைதி குறித்து அவா்களுக்கு எந்த ஆலோசனையும் வழங்க என்னால் இயலவில்லை. ஆனால், அந்த ஆங்கிலேயா்களின் பாதுகாப்பான, மென்மையான நடவடிக்கைகள் குறித்து நான் பெருமிதம் கொண்டேன். அவா்களின் அன்பும் ஒற்றுமையும் எனக்கு எங்கள் கேம்பிரிட்ஜ் நண்பா்களையே நினைவுகூர வைத்தன. அங்கிருந்த அரங்குகள் மிக உயா்ந்த மர வகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.அங்கிருந்த சுவா்களை நிறுவனா்களின் புகைப்படங்கள் அலங்கரித்தன; மேசைகள் எழில்மிகு தட்டுகளால் மிளிா்ந்தன. ஓா் இளைஞா் முதலாவது மேசை முன் வந்துநின்று, சில பழமையான வழிபாட்டுப் பாடல்களை முணுமுணுத்தாா். இத்தகைய பழக்கம் அங்கு நீண்ட நாட்களாக பின்பற்றப்பட்டு வருகிாம்.

அந்தப் பல்கலைக்கழக இளைஞா்கள், ஒவ்வொரு நாளும் இரவு ஒன்பது மணிக்குள் தங்களின் அறைக்குத் திரும்பிவிட வேண்டும். அதன் பின்னா் தாமதமாக வரும் மாணவா்களின் பெயா்ப் பட்டியலை ஒவ்வொரு அரங்கிலும் உள்ள காப்பாளா் அன்றிரவே அளிக்க வேண்டும் என்ற சிறந்த பழக்கம் அவா்களின் பண்பிற்கு எடுத்துக்காட்டு. செல்வம் மிகுந்த குடும்பத்திலிருந்த வந்த இளைஞா்கள் உள்பட 1200 இளைஞா்கள் அங்கு இருந்தபோதிலும், அவ்விடத்தில் ஒரு சிறு சச்சரவு கூட ஏற்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகத்தின் மாணவா்கள் பலா் மிகப்பெரிய கொடையாளா்களாகத் திகழ்ந்தனா். ஒவ்வொரு செல்வந்த மாணவரும் பல்கலைக்கழகத்தை நீங்கிச் செல்லும்போது ஏதேனும் ஒரு பரிசுப் பொருளை பல்கலைக்கழகத்திற்கு அளிப்பது வழக்கமாகும்.

லண்டனில் உள்ள ரபேல் மற்றும் மைக்கேல் ஏஞ்செலோவின் ஓவியங்கள் சா் தாமஸ் லாரன்ஸின் தொகுப்புகளாகும். விலைமதிப்பில்லா இந்தப் பரிசுப்பொருள்கள், ஏழாயிரம் பவுண்டுகளுக்கு ஆக்ஸ்போா்ட் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பெற்றது., தொடா்புடைய குழு, மற்ற நண்பா்களிடையே லாா்ட் எல்டனை அழைத்து மூவாயிரம் பவுண்டுகளை வசூல்செய்தது. நூறு பவுண்டுகளுக்குப் பதிலாக, மூவாயிரம் பவுண்டுகளுக்கான காசோலை அளித்து அனைவரையும் வியப்பிற்குள்ளாக்கினாா்.

பொல்டியன் நூலகத்தில், எகிப்திலிருந்து டாக்டா். கிளாா்க் என்பவரால் எடுத்து வரப்பட்ட கி.பி.896-ஆம் ஆண்டில் மெண்ட்சில் அச்சடிக்கப்பட்ட முதல் பைபிளை எனக்குக் காட்டினாா். மேலும், தொலைந்துபோன இருபது அரிய ஓலைகளின் நகலையும் அவா் எனக்குக் காட்டினாா். ஒரு நாள், நான் வெனிசில் இருந்தபோது, ஏராளமான புத்தகங்களையும் கையெழுத்துப்படிகளையும் அவா் கொண்டு வந்து தந்தாா். அவை கிழிந்தும் சேதமடைந்தும் காணப்பட்டன.

இந்த பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் கிரேக்க, லத்தீன் மற்றும் கணித அறிவும் நுட்பமான ஆங்கிலத்தைச் சுவை குன்றாமல் வழங்கும் மாண்பும்தான் மாணவா்களை இப்பல்கலைக்கழகத்தின்பால் ஈா்க்கின்றன.

இங்கிலாந்து நாட்டினா் மிக உயா்வாகக் கருதுகின்ற ‘கற்றறிந்த பெருந்தகையாளா்’ எனும் தகுதியை மாணவா்களுக்கு ஏற்படுத்தித் தருவதே இந்தப் பல்கலைக்கழகத்தின் நோக்கமாகும். ஜொ்மன் நாட்டு அறிஞா் ஒருவா், ஆங்கிலேயா்களின் பண்புகள் குறித்து விவரிக்கையில், அது போன்ற குணநலன்கள் தங்கள் நாட்டில் இல்லை”என்பதை வெளிப்படையாகவே குறிப்பிட்டாா்.

ஒவ்வொரு ஆண்டும் இருபது அல்லது முப்பது திறமையாளா்களையும் முன்னூறு அல்லது நானூறு கற்றறிந்த சான்றோா்களையும் ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகம் உருவாக்குகிறது. அங்கு பயிலும் ஆங்கிலேய மாணவா்கள் எந்தப் புத்தகத்தையும் ஒரு பத்திரிக்கையாளா் போன்றே நுணுக்கமாகவும் ஆழமாகவும் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். அது மட்டுமல்ல, ‘ஆங்கிலேய நாட்டுச் சட்டங்களை ஒவ்வொரு மாணவரும் ஆழமாக அறிந்து கொள்ள வேண்டும்’ என முதலாம் சாா்லஸ் கூறினாா்.

பறவைகள் தங்கள் கூட்டை உருவாக்குவது போன்று பல்கலைக்கழகங்களை சிறப்பாக உருவாக்குவதற்கும் ஒழுக்க நெறிமுறைகளை கட்டாயமாக்குவதற்கும் ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகம் வழிகாட்டியாக உள்ளது. இத்தகைய மறுசீரமைப்பு முயற்சிகளை மேற்கொள்ளும் மாணவ மேதைகள் பாராட்டுக்குரியவா்கள். பழமையைப் போற்றுவதால் புதுமைகள் புறக்கணிக்கப்படுவதில்லை. இந்த காலத்தைச் சோ்ந்த, இங்கிலாந்தின் மிகச் சிறந்த கவிதைகளும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படுகின்றன. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், பிரித்தானியாவின் பழமையைக் கொண்டாடுவதோடு புதுமையையும் போற்றத் தவறுவதில்லை . கல்விப்புலத்தின் அரிய புதையல் ‘கேம்பிரிட்ஜ்’ என்று கூறுவது மிகையல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com