வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய விடுதலை

கஸ்தூரி (35) மற்றும் வெங்கடேஷ் (55) அவர்களின் கடைக்குட்டி மகன் சக்திவேல் (13) மீட்கப்பட்ட 6 மாதத்தில்
வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய விடுதலை

கஸ்தூரி (35) மற்றும் வெங்கடேஷ் (55) அவர்களின் கடைக்குட்டி மகன் சக்திவேல் (13) மீட்கப்பட்ட 6 மாதத்தில் தன்னுடைய குடும்பம் எவ்வளவு தூரம் பயணித்து வந்துள்ளது என்பதை தங்கள்  முகத்தில் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தனர். இந்த முறை கஸ்தூரி அல்லது அவரது அன்புக்குரியவர்களையோ மிரட்டுபவர்கள் யாரும் இல்லை.

இன்று, ‘நாங்கள் இன்னமும் செங்கல்சூளையில் இருந்திருந்தால் இந்த விடுமுறையை எங்கள் குடும்பத்தோடு கழிக்க முடியாது நாங்கள் செங்கலை வெட்டிக் கொண்டிருப்போம்’ என்கிறார் கஸ்தூரி.

கஸ்தூரியும் வெங்கடேசனும் அவர்களது மூத்த மகள் திருமணத்துக்காக ஒருவரிடம் முன் பணம் வாங்கி இருந்தார்கள். அதுவே அவர்கள் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருக்க காரணமாக அமைந்தது.

அவர்கள் முதலில் அங்கு வேலை செய்யத் துவங்கிய போது, வரவிருக்கும் மோசமான நாட்களைப் பற்றிய எந்தவித சந்தேகமும் அவர்களுக்கு இல்லை.  செங்கல் சூளை முதலாளியின் கோபம் தங்களைப் பற்றிய கேள்விகளை அல்லது தாங்கள் வாங்கிய கடனில் மீதம் எவ்வளவு உள்ளது என்பது பற்றி    கேட்பதிலிருந்து அவர்களை தடுத்து.  கஸ்தூரி, வெங்கடேஷ் மற்றும் சக்திவேல் மிகவும் குறைந்த கூலியான ரூபாய் 500க்கு அந்த செங்கல் சூளையில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தனர்.  இந்த கூலி ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் ஆனது, வார இறுதியில் அந்த நாளின் முடிவில் அவர்களுக்கு வழங்கப்பட்டது.  இந்த பணம் அவர்களுக்கு போதுமானதாக இல்லை, தவிர அவர்கள் பல நாட்கள் பட்டினியிலும் இருக்கவேண்டியிருந்தது.

‘என் மகன் தூங்கச் செல்லும்போது அவன் வயிறு நிறைய உணவுக்கு பதிலாக தண்ணீரை மட்டும் நிரப்பி அவனை தூங்க செய்த நாட்கள் பல. ஏனென்றால் எங்களுக்கு போதுமான உணவு பலநாட்கள் இருந்ததில்லை’ என்று கஸ்தூரி நினைவு கூறுகிறார். ‘ஆனால் இன்று, எங்களுக்கு தேவையான உணவையும் சத்தான உணவையும் எங்களால் சமைக்க முடிகிறது. இது வரவேற்கத்தக்க மாற்றம். செங்கல் சூளையில் பெரும்பாலும் தண்ணீர் விட்ட சாதத்தையே சாப்பிட்டு வந்த எங்களுக்கு இது மிகப் பெரிய மாற்றம்.  புரதச் சத்து நிறைந்த கறி மற்றும் மீன் உணவை கூட எங்களால் இப்பொழுது வாங்க முடிகிறது’ என்று கூறுகிறார் கஸ்தூரி.

செங்கல் சூளையில் அதிகாலை 2 மணியிலிருந்து இரவு 7 மணி வரை முதுகு ஓடிய அவர்கள் வேலை செய்தார்கள். இது அவர்கள் உடல் நலத்தை பெரிதும் பாதித்தது. அவர்களுக்கு ஓய்வோ அல்லது விடுமுறையோ எடுக்க அனுமதி இல்லை.  ஏன் மருத்துவமனைக்கு சென்று மருத்துவம் பார்த்துக் கொள்ள கூட அவர்களுக்கு அனுமதி இல்லை. மழையோ வெயிலோ அவர்களிடமிருந்து கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்பட்டது. கஸ்தூரியை மிகவும் காயப்படுத்திய விஷயம் என்னவென்றால் அவளது அண்ணன் மகளின் இறுதி காரியத்தை செய்வதற்கு கூட கஸ்தூரிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.  அண்ணன் மகளை அவர் பிறந்ததிலிருந்து தன் மகள் போல வளர்த்தவர் கஸ்தூரி. அவர்கள் குடும்பங்களுக்கு  போதுமான (உணவுப்) பொருட்கள் எதுவும் இல்லாமலும்,  அங்கு இங்கு செல்வதற்கான மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில்,, குடும்ப நிகழ்ச்சிகள்,  திருவிழாக்கள் மற்றும் துக்க நிகழ்ச்சிகள் எதிலும் பங்கு கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது, இந்த சிறிய குடும்பம் மிகக் குறைவான, அல்லது அறவே இல்லாத உணவோடும், தண்ணீர் மற்றும் ஓய்வு இல்லாத நிலையில் செங்கல் சூளையில் பணிபுரிய கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.  செங்கல் சூளையில் இருந்த போது, அவர்கள்  சாகாமல் உயிரோடு இருந்தார்களே தவிர மனிதர்களாக வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது.

ஏற்கனவே இருக்கும் பல கட்டுப்பாடுகளோடு,  அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் பேசுவதில் இருந்தும் இந்த குடும்பம் தடுக்கப்பட்டது. அடிப்படையில் முதலாளியின் வேலை வாங்கும் முறை என்பது அப்பட்டமான சுரண்டல்.  கஸ்தூரியுடனான உரையாடலின் போது,  அவர்கள் கொத்தடிமைகளாக இருந்த ஒரு ஆண்டுக்குப் பிறகு, அவர்களது சூளைக்கு அருகிலிருந்த வேறு ஒரு சூளையில் அரசு அதிகாரிகளின் ஆய்வு நடந்தது.  ஆனால் காவலர்களும் அரசு அதிகாரிகளும் அந்த இடத்தை விட்டு செல்லும் வரை, தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறோம் என்ற போர்வையில் சூளை முதலாளிகளால் தொழிலாளர்கள் ஒரு அறையில் போட்டு பூட்டி வைக்கப் பட்டார்கள்.  அதிகாரிகள் சென்ற பிறகு பூட்டிய அறையிலிருந்து வெளியே வந்த இவர்களைப் பார்த்த அருகாமையிலிருந்த தொழிலாளர்கள் என்ன நடந்தது என்று  கஸ்தூரியிடம் சொல்லியிருக்கிறார்கள்.  அன்று அரசு அதிகாரிகள் கண்ணில் பட்டிருந்தால் கஸ்தூரியும் அவரது குடும்பமும் மீட்கப்பட்டு இருப்பார்கள் என்பதையும் அருகாமை சூளையின் தொழிலாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

சக்திவேலை பள்ளியை விட்டு நிறுத்தும்படி செங்கல் சூளை முதலாளி கூறினார்.  ஆனால் சக்திவேலுக்கு கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆசை.  எனவே அவன் பள்ளியை விட்டு இடைவிலக மறுத்துவிட்டான். ஆனால் காலப்போக்கில் அவனே  படிப்பை பாதியில் நிறுத்துவது தான் சரி என்று முடிவு செய்தான்.  ஏனென்றால் பள்ளி படிப்பு தவிர மீதி நேரத்தில் எல்லாம் பொழுது விடிந்ததிலிருந்து இரவு வரை அவன் செங்கல்சூளையில் வேலை செய்ய வேண்டி இருந்தது.  அவனுடைய வயதுக்கு அது மிக அதிகம்.  சிறு வயதிலிலேயே அங்கிருந்த சூழல் சக்திவேலை, இந்த செங்கல் சூளையில் இருந்து தப்பிச் செல்ல முடியவில்லை என்றால் நாம் குடும்பத்தோடு இறந்து விடுவதே மேல் என்று நினைக்க வைத்தது.

இன்று சக்திவேல் மீண்டும் பள்ளிக்குச் செல்கிறான், படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துகிறான்.  ஒரு போலீஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்பது அவன் கனவு. அவனது தந்தையை போல சக்திவேலும் மிக மென்மையாக பேசுகிறார்.  தனது குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார். கொத்தடிமையால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், படிப்பை முடித்துவிட்டு சட்டத்தை அமல்படுத்தும் ஒரு பணியில் இருக்க சக்திவேலை தூண்டுகிறது. இத்தகைய சமூக பிரச்னைகளை ஒடுக்க தாம் உதவி புரிய வேண்டும் என்று அவனை நினைக்க வைத்துள்ளது.

தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பற்றி வெளியில் சொல்ல தேவையான தைரியத்தை தாங்கள் பெற்றதற்கு கஸ்தூரி நன்றி உடையவராக இருக்கிறார். அதனால்தான் அவர்களால் விடுதலை அடைய முடிந்தது.  ‘நான் அன்றைய தினம் பேசினேன், அதனால் இன்று விடுதலையடைந்துள்ளோம்’ என்கிறார் கஸ்தூரி.

கஸ்தூரியும் வெங்கடேசனும் தினக்கூலி வேலைகளான கற்பாறை உடைப்பது,  மரம் வெட்டுவது, மூட்டை தூக்குவது, பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகின்றனர்.  இதனால் அவர்களுக்கு வாழ்வதற்கு தேவையான போதுமான பணம் கிடைக்கிறது.

பயமோ அல்லது துக்கமோ இவை இரண்டின் சாயல் அவர்கள் முகங்களில் இப்போது இல்லை. அவர்களுக்கு விடுதலை கிடைத்த அந்த நாளிலிருந்து அவர்கள் வாழ்க்கையில் மலர்ந்துள்ள தூய்மையான சந்தோஷம் அவர்கள் முகங்களில் நிறைந்திருக்கிறது.  இந்த சிறிய குடும்பம் ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையோடும் சந்தோஷத்தோடும் எதிர்கொள்கிறார்கள்.

-  டிவைன் ஆலிவா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com