சுடச்சுட

  

  புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தது யார் ? பியூஷ் கோயல் சொல்வதைக் கேட்போம்

  By C.P.சரவணன், வழக்குரைஞர்  |   Published on : 13th September 2019 04:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  albert_einstein

   

  அகில இந்திய அளவிலான வர்த்தக வாரியத்தின் உயர்மட்டக் கூட்டம் தில்லியில் மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடந்தது. 

  பொருளாதாரத்தில் கணக்கீடுகளைக் கொண்டுவராதீர்கள். ஐன்ஸ்டீன் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க அவருக்கு கணக்கு உதவவில்லை. எனவே டிவி சேனல்களில் வரும் தகவல்கள் மூலம் பொருளாதாரத்தை கணக்கில் கொள்ளாதீர்கள் என்றார்.

  இவ்வாறு பியூஷ் கோயல் கூறியது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது, உண்மையில் புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் யார்...?

  சர் ஐசக் நியூட்டன் 'ஆப்பிள் கதை' 
  ஆப்பிள் மரத்திலிருந்து ஆப்பிள் பழம் பூமியை நோக்கி விழுவதைக் கண்டபோது, பளபளவென மூளையில் ஆயிரம் வாட்ஸ் பல்புகள் எரிந்தது போல ஈர்ப்பு விசைக் கொள்கை சர் ஐசக் நியூட்டனுக்கு படிபட்டது என்று வரலாறு கூறுகிறது. இது உண்மையில் நடந்த நிகழ்ச்சி என்பதில் சந்தேகமில்லை என ஒருதரப்பில் கூறுகின்றனர். மற்றொரு தரப்பினர், நியூட்டன் ஈர்ப்பு விசை பற்றி இளம் வயதிலேயே சிந்திக்கத் தொடங்கிவிட்டார். அதை பிறர் புரிந்துகொள்ளும் வகையில் விவரித்து சொல்வதற்காக இப்படி ஒரு 'ஸ்கிரிப்ட்'ஐ உருவாக்கினார் என்றும் கூறி வருகின்றனர்.

  புவி ஈர்ப்பு விசை (Newton's law of universal gravitation)
  பொருள் ஈர்ப்பு விசை என்பது அண்டத்தில் உள்ள ஏதேனும் இரு பொருள்களுக்கு இடையே செயல்படும் ஈர்ப்பு விசை ஆகும். இவ்விசையானது பொருள்களின் நிறைகளைச் சார்ந்த கவர்ச்சி விசையாகும். அடிப்படை விசைகளில், பொருள் ஈர்ப்பு விசையே மிகவும் வலிமை குன்றிய விசையாகும். ஆனால் அண்டத்தில் நெடுந்தொலைவிற்குச் செயல்படக் கூடியது. இது 'ஈர்ப்பியல் விசை' எனவும் வழங்கப்படும்.

  நியூட்டனின் ஈர்ப்பியல் விதிப்படி, இருப்பொருட்களுக்கு இடையேயுள்ள ஈர்ப்பு விசையானது, அவற்றின் நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர் தகவிலும், அவற்றிற்கிடையேயுள்ள தொலைவின் இருமடிக்கு எதிர் தகவிலும் இருக்கும். அதாவது, m1 , m2 என்பன முறையே இரு பொருள்களின் நிறைகள் எனவும் r என்பது அவற்றிற்கு இடைப்பட்ட தொலைவு எனவும் கொண்டால், இவ்விரு பொருள்களுக்கு இடையேயான ஈர்ப்பு விசை, G என்பது ஈர்ப்பியல் மாறிலி (gravitational constant). இதன் மதிப்பு 6.67 x 10−11 N m2 kg−2. SI அலகு முறைப்படி, நிறையின் அலகு கிலோகிராம் (kg) எனவும் தூரத்தின் அலகு மீட்டர்(m) எனவும் கொடுக்கப் பெற்றால் விசையின் அலகு நியூட்டன்(N) ஆகும்.

  தடையற்ற வீழ்ச்சி [Free fall]  
  எடையற்ற தன்மையை உணர்வதற்கு நீங்கள் எங்கும் போகத் தேவையில்லை, ஒரு உயரமான அடுக்கு மாடிக் கட்டிடத்தின் மேலே லிப்டில் சென்று லிப்டின் கையிற்றை அறுத்துவிட்டால் போதும், கீழே பூமியைத் தொடும் வரை நீங்கள் எடையற்றத் தன்மையில் இருப்பீர்கள். இதை கலிலியோ முதலில் கண்டுபிடித்துச் சொன்னார்.  அதாவது, எந்த எடையுள்ள பொருளானாலும் சரி, உயரத்தில் இருந்து விடும்போது காற்றின் தடை இல்லாவிட்டால், ஒரே சமயத்தில் பூமியை வந்தடையும்.  அதனால் லிப்டின் கயிறை அறுத்து விட்டால்,  கையில் உள்ள பொருளை விட்டு விட்டாலும், லிப்ட் தரையில் மோதும் வரை அப்படியே மிதக்கும்.  நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் எடையற்ற தன்மையை இவ்விதம் உணரும்.  இந்த நிலை தடையற்ற வீழ்ச்சி [Free fall] எனப்படும்.

  பியூஷ்கோயலும் ஐன்ஸ்டீனும்
  பியூஷ்கோயலுக்கு ஆப்பிள் கதை மட்டும் ஞாபகம் இருக்கிறது. மற்றவற்றை மறந்துவிட்டார். புவி ஈர்ப்பு விசையைக் கண்டறிந்தவர் ஐன்ஸ்டீன் என்றதுடன், ஆப்பிள் கதைக்குப் பின் உள்ள சூத்திரத்திற்கு(Formula) கணக்கு தேவை என்பதை மறந்துவிட்டார் போலும்..........

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai