ஓ.. இது தான் அந்த வெள்ளை அறிக்கையா? 

இந்திய நாடாளுமன்றத்தில், 2012ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி 21.05.2012 அன்று தாக்கல் செய்தார் கருப்புப் பணம் குறித்த வெள்ளை அறிக்கை! 
ஓ.. இது தான் அந்த வெள்ளை அறிக்கையா? 

இந்திய நாடாளுமன்றத்தில், 2012ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி 21.05.2012 அன்று தாக்கல் செய்தார் கருப்புப் பணம் குறித்த வெள்ளை அறிக்கை! 

  • அதன்பின், மத்திய அரசிடம் பொருளாதாரம் குறித்து காங்கிரஸ் வெள்ளை அறிக்கையை கேட்டுள்ளது. 
  • தமிழக கல்வி நிறுவனங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளார். 
  • அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட தொழில் முதலீடுகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். 
  • அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒருபடி மேலே போய் “வெள்ளை அறிக்கை மட்டும் போதுமா அல்லது அதனுடன் சேர்ந்து பச்சை, மஞ்சள் அறிக்கையுடன் வெள்ளரிக்காயும் சேர்த்து தருவோம்... என்கிறார்.  

ஆளும் கட்சிகளைப் பார்த்து எதிர்கட்சிகள் கேட்கும் அறிக்கை…அது என்ன வெள்ளை அறிக்கை?

வெள்ளை அறிக்கை வரலாறு
வெள்ளை அறிக்கை என்ற சொல் பிரிட்டிஷ் ஆட்சியரால் தோற்றுவிக்கப்பட்டது.  மேலும் முதலில், 1922 ஆம் ஆண்டின் சர்ச்சில் வெள்ளை அறிக்கை தான் நன்கு அறியப்பட்ட உதாரணமாக சுட்டிக்காட்டுகின்றனர்.

பிரிட்டிஷ் அரசாங்கத்தில் இது வழக்கமாக நீல புத்தகம் என்று அழைக்கப்படுவதின் குறைவான விரிவான பதிப்பாகும், இரண்டு சொற்களும் ஆவணத்தின் அட்டையின் நிறத்திலிருந்து பெறப்படுகின்றன. 
வெள்ளை அறிக்கை என்பது ஒரு "... ஜனநாயகத்தின் கருவி". இதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் தேவை.. 

கனடாவில், ஒரு வெள்ளை அறிக்கை "... ஒரு கொள்கை ஆவணம் ஆகும்." வெள்ளை மற்றும் பச்சை பயன்பாட்டின் மூலம் கொள்கை தகவல்களை வழங்குதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடையே கொள்கை பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தகவல் மற்றும் பகுப்பாய்வு பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும் அறிக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. "

ஆஸ்திரேலியாவில், முழு வேலைவாய்ப்பு பற்றிய வெள்ளை அறிக்கை மற்றும்  இங்கிலாந்தில், 1939 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை மற்றும் 1966 பாதுகாப்பு வெள்ளை அறிக்கை ஆகியவை அரசாங்கத்தின் வெள்ளை அறிக்கைகளுக்கு முக்கிய எடுத்துக்காட்டு ஆகும்.

இஸ்ரேலிய வரலாற்றில், 1939ஆம் ஆண்டின் வெள்ளை அறிக்கை - பிரிட்டிஷ் கொள்கையில் சியோனிசத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்டது

வெள்ளை அறிக்கை(white paper)
ஒரு வெள்ளை அறிக்கை என்பது ஒரு குறிப்பிட்ட  பொருள் பற்றி முழுமையாகத் தெரிவிக்கும் ஒரு அங்கீகார ஆவணம். இது ஒரு குறிப்பிட்ட ஆவணத்தில் நிபுணரின்  தீர்வும் அல்லது பரிந்துரையையும் கொண்டதாக இருக்கும். ஒரு சிக்கலைப் புரிந்துகொள்ளவோ, சிக்கலைத் தீர்க்கவோ அல்லது முடிவெடுக்கவோ வெள்ளை அறிக்கை உபயோகமாக இருக்கும்.

வெள்ளை அறிக்கை, தரவு மையப்படுத்தப்பட்ட(data-centric), கனமான வணிக ஆவணமாகும். அதிக அளவு தரவு மற்றும் ஆராய்ச்சி காரணமாக, வெள்ளை அறிக்கைகள் ஆழமான வாசிப்புகள் மற்றும்  எளிமையான தொனியில் இருக்கும்.

வெள்ளை அறிக்கை என்பது ஒரு அரசாங்கமோ அல்லது ஒரு அமைப்போ ஒரு பிரச்னைக்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகும். வெள்ளை அறிக்கை மூலம் வெளியிட்ட அமைப்பின் தெளிவான குறிக்கோளை மக்கள் அறிந்துகொண்டு, விவாதிக்கவோ, ஆலோசிக்கவோ முடியும். வெள்ளை அறிக்கை, ஒரு பிரச்னைக்குத் தீர்வாக அல்லது புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய வெளியிடப்படுகிறது.

நாடளுமன்றத்தில் முடிவெடுக்கப்பட்ட அரசின் கொள்கையை சட்டவடிவம் ஆக்குவதற்கு முன் மக்களுக்குத் தெரிவிக்கும் விதமாக கனடாவில் இவ்வறிக்கை வெளியிடப்படுகிறது.

தற்காலத்தில், புதிய பொருள் ஒன்றை சந்தையில் அறிமுகம் செய்யும் முன் அதன் அம்சங்கள் பற்றி விளம்பரம் செய்ய அந்நிறுவனங்கள் வெள்ளை அறிக்கையை வெளியிடுகின்றன. வணிக வெள்ளை அறிக்கைகள் தகவல் தொடர்பாக பயன்படுகிறது.

பயன்பாடு 
ஒரு குறிப்பிட்ட திட்டம் அல்லது செயல்களுக்கு சம்மந்தமில்லாத வெளிப் பார்வையாளர்களுக்காக பொதுவாக வெள்ளை ஆவணங்கள் எழுதப்படுகின்றன. 

பச்சை அறிக்கை (Green papers)
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிந்து சொன்னாரோ தெரியாமல் சொன்னாரோ. பச்சை அறிக்கை என்பதும் புழக்கத்தில் உள்ளது.

பச்சை அறிக்கை என்பது விவாதிப்பதற்காக அடிக்கடி வெளியிடப்படும் திறந்தநிலை அறிக்கையாகும். பல பச்சை அறிக்கைகள் மூலம் விவாதிக்கப்பட்டு முடிவான கொள்கை, சட்டம் ஆவதற்கு முன் வெள்ளை அறிக்கையாக வெளிவரும்.

பச்சை அறிக்கை என்பது ஒரு அரசாங்கமோ அமைப்போ ஒரு பிரச்னைக்கு எந்தத் தீர்வும் தராமல் தங்கள் நிலையை மட்டும் விளக்கும் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பாகும். இதன் மூலம் விவாதிக்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும்.

ஐரோப்பிய ஆணையம் வெளியிடும் பச்சை அறிக்கை விவாதத்தைத் துவக்கும் அறிவிப்பாக பயன்படுகிறது. கனடாவின் பச்சை அறிக்கை, அரசின் இறுதி முடிவாக இல்லாமல், ஒரு முன்மொழிவாக மக்கள் முன் வைக்கப்படுகிறது. விவாதங்களுக்குப் பிறகு இறுதி முடிவு எடுக்கப்பட்டு வெள்ளை அறிக்கையாக வெளியிடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com