வார்த்தைகளை விட மெளனம் அதிக வலி உணர்த்தியது: சிறுவனின் கொத்தடிமை அனுபவம்

மாதவிற்கு பன்னிரெண்டு வயது. முதலில் வெட்கத்துடனும், அமைதியோடும் இருந்தாலும் அவனுடைய புன்னகை அறையை ஒளிரச் செய்ய வெகுநேரம் எடுக்கவில்லை.
வார்த்தைகளை விட மெளனம் அதிக வலி உணர்த்தியது: சிறுவனின் கொத்தடிமை அனுபவம்


மாதவிற்கு பன்னிரெண்டு வயது. முதலில் வெட்கத்துடனும், அமைதியோடும் இருந்தாலும் அவனுடைய புன்னகை அறையை ஒளிரச் செய்ய வெகுநேரம் எடுக்கவில்லை. மாதவ் ஒரு அரிசி ஆலையில் இரவும் பகலும் வேலை செய்து வாரம் 50 ரூபாய் சம்பாதித்திருக்கிறான். பள்ளிக்குச் செல்வதற்குப் பதிலாக, அவனது வயது ஒத்த சிறுவர்களுடன் விளையாடுவதற்குப் பதிலாகப் பெரியவர்களுடன் சேர்ந்து இயந்திரங்களுடன் வேலை செய்யவும், அரிசி, நெல், தவிடு ஆகியவற்றுடன் வாழ வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது. அவனது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் அதே அரிசி ஆலையிலும், சாலையின் எதிர்புறமுள்ள மற்றொரு நிறுவனத்திலும் வேலை செய்கின்றனர். தந்தையும் மூத்த சகோதரரும்  வாங்கிய சிறிய அளவிலான கடன்களைத் திருப்பிச் செலுத்த மொத்தக் குடும்பமும் கடுமையாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது; அவ்விடத்தை விட்டு அவர்கள் வெளியேறவோ, வேறு வேலை செய்துப்  பணத்தை திருப்பித் தரவோ அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

மாதவ்வின் தாத்தா காலமான போது அவனது தந்தை அரிசி ஆலை உரிமையாளரை அணுகி தன் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி கோரியுள்ளார். குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஆலையிலே இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதால் குடும்பத்தில் சிறியவனான மாதவ்வை பிணையாக விட்டுச் சென்றனர்.  அன்றாட செலவுகளுக்கும், உணவு, மருந்துகள் வாங்கவுமே பணம் தேவைப்பட்டதால் மேலும் கடன் வாங்க நேர்ந்துள்ளது. இதனால் கடன் தொகை பெருகியபடியே இருந்தது. சட்டங்களைக் குறித்த அறிவு இல்லாமை, தாக்குதலுக்கு உள்ளாவோம் என்ற அச்சம் ஆகியவற்றால் அக்குடும்பத்திலுள்ள ஆண்கள் தங்கள் சுய மரியாதையை இழந்து இருந்தனர். பெண்களோ பாலியில் துன்புறுத்தல்களுக்கு அஞ்சினர். குழந்தையாய் இருந்தாலும் மற்ற கொத்தடிமைத் தொழிலாளர்களுடன் மாதவ் வேலை செய்ய வேண்டியிருந்தது. இந்நிலையில் வெளி உலகத்தைப் பார்க்க விரும்பிய மாதவ் தன்னை மீட்க யாராவது வருவார்களா என ஆவலுடன் காத்திருந்தான்.

கொத்தடிமைகளைப் பற்றிய ஆதாரங்களைத் திரட்டி உள்ளூர் அரசு அதிகாரிகளிடம் சமர்ப்பித்தது ஒரு குழு. இதன் விளைவாக மாவட்ட நிர்வாகத்தில் புகார் அளிக்கப்பட்டு அவர்களின் மீட்புக்கு வழி வகுத்தது. இரண்டு அரிசி ஆலைகளில் இருந்து மாதவ் மற்றும் பதினான்கு கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு அன்றே விடுதலைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அன்று மாதவ் மற்றும் பிற தொழிலாளர்கள் சுதந்திர காற்றைச் சுவாசித்தனர். தற்போது மாதவ் தனது குடும்பத்தினருடனும் உடன்பிறப்புகளுடனும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார். கலாச்சாரத்தையும் சூழலையும் பொறுத்து காதல், சிரிப்பு, பயம் ஆகியவை மாறுபடுகிறது என்பதில் சந்தேகமில்லை.

அரிசி ஆலை உரிமையாளரைப் பற்றி மாதவ்விடம் கேட்டபோது தலை குனிந்து அவனது கண்கள் தடுமாறின. அவனது மௌனம் அவன் பேசும் வார்த்தைகளை விடவும் அதிகம் பேசியது.

மாதவ் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட ஆசைப்படுகிறான். அவனுக்கு சச்சின் டெண்டுல்கரை பிடிக்கும்.  குடும்பத்தையும் அதன் குடும்பத் தேவைகளைக் கவனிக்க அவனது தந்தை கடுமையாக உழைக்கிறார் என்று அவர் கூறுகிறார். மாதவ்வின் தந்தை தற்போது மார்க்கெட்டில் அரிசி மூட்டைத் தூக்கும் வேலை செய்கிறார். தாய் வீட்டையும் மாதவ்வின் உடன்பிறந்தவர்களையும் பார்த்துக் கொள்கிறார். மாதவ் ஒரு பிரகாசமான, நிலையான எதிர்காலத்தை நோக்கி காத்திருக்கிறான்.

- விஜய்.பி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com