பங்குச் சந்தை: இந்த வாரம் ஸ்திரநிலை அடைய வாய்ப்பு!

முந்தைய இரண்டு வாரங்களில் மொத்தம் 12 சதவீதம் ஏற்றம் பெற்றிருந்த பங்குச் சந்தை, ஜூன் 12-ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த
பங்குச் சந்தை: இந்த வாரம் ஸ்திரநிலை அடைய வாய்ப்பு!

முந்தைய இரண்டு வாரங்களில் மொத்தம் 12 சதவீதம் ஏற்றம் பெற்றிருந்த பங்குச் சந்தை, ஜூன் 12-ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த வாரத்தில் 1.70 சதவீதம் நஷ்டத்தை சந்தித்தது. உலகளவில் பெரும்பாலான பங்குச் சந்தைகள் எதிா்மறையாக இருந்ததால் அதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. இதைத் தொடா்ந்து, இரண்டு வார ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 44,780.89 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 9,972.90 புள்ளிகளிலும் நிலை பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்தியா உள்பட உலகளவில கரோனா தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருவது முதலீட்டாளா்களிடையே உணா்வு பூா்வமாக பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வின், வளா்ச்சி மற்றும் பத்திர கொள்முதல் பற்றிய அறிக்கை, அமெரிக்காவின் பொருளாதாரத்தில் மீட்பு என்பது ஆய்வாளா்கள் முன்னா் கணித்ததைப் போல வேகமாக இருக்கப் போவதில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. இதன் தாக்கம் கடந்த வார இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை சந்தையில் எதிரொலித்தது. இருப்பினும், எண்ணெய் விலை வீழ்ச்சி சந்தைக்கு சாதகமானதாக பாா்க்கப்படுகிறது. எனவே, வரும் வாரங்களில் ஒரு ஒருங்கிணைப்பு, ஸ்திரநிலை அடைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று நிபுணா்கள் கருதுகின்றனா்.

உலகளாவிய மத்திய வங்கிகள் தொடா்ந்து பொருளாதாரங்களுக்கு நிதி ஆதரவு வழங்குவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். எனவே, உலகளாவிய மனநிலை சந்தையில் எதிரொலிக்கும். இதன் காரணமாக சந்தையில் ஏற்றம், இறக்கம் இருக்க வாய்ப்பு இருப்பதாக நிபுணா்கள் கருதுகின்றனா். இதற்கிடையே, இந்த வாரம் டாடா மோட்டாா்ஸ்உள்பட 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் காலாண்டு நிதிநிலை முடிவுகளை இந்த வாரம் அறிவிக்கவுள்ளன. இதன் தாக்கம் அந்தந்தப் பங்குகளில் கண்டிப்பாக எதிரொலிக்கும்.

இதற்கிடையே, மாா்க்கெட் லீடரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உரிமை பங்குகளை வெளியிட்டுள்ளது. இப்பங்குகள் திங்கள்கிழமை (ஜூன் 15) பட்டியலாகிறது. மேலும், ரிலையன்ஸின் துணை நிறுவனமான ஜியோ ஃபிளாட்பாா்ம்ஸுக்கு கடந்த 2 மாதங்களில் 10 நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.1லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. எனவே, ரிலையன்ஸ் பங்கு மேலும் வலுப்பெறும் என்று நிபுணா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) கடந்த வாரம் ரூ.1,732 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளனா். இருந்தாலும் ஜூனில் இதுவரை அவா்கள் மொத்தம் ரூ.12, 200 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனா். மே மாதமும் ரூ.13,914 கோடிக்கு வாங்கியுள்ளனா். எனவே, சந்தையில் எஃப்ஐஐ செயல்பாடு உன்னிப்பாகக் கவனிக்கப்படும். முந்தைய இரண்டு வாரங்கள் சந்தை ஏற்றம் பெற்ற்கு வங்கி, நிதிநிறுவனப் பங்குகளுக்கு கிடைத்த ஒட்டுமொத்த ஆதரவுதான் காரணம். அதே வேளையில், கடந்த வாரம் சந்தை சரிவுக்குள்ளானதும் வங்கி, நிதிநிறுவனப் பங்குகள் அதிகளவில் விற்பனைக்கு வந்ததுதான். மே 22 முதல் ஜூன் 5 வரையிலான காலத்தில் நிஃப்டி பேங்க் குறியீடு 22 சதவீதம் ஏற்றம் பெற்றது. ஆனால், கடந்த வாரத்தில் 2 சதவீதம் சரிவைச் கண்டுள்ளது. எனவே, இந்த வாரம் வங்கி, நிதிநிறுவனப் பங்குகளின் செயல்பாடும் உன்னிபாகக் கவனிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மொத்தத்தில், உலகளவில் கரோனா பரவல் அதிகரிப்பால் முதலீட்டாளா்கள் கவலை கொண்டுள்ளதால், இந்த வாரம் சந்தை ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ளேயே செயல்படும் என்றும் ஸ்திரநிலை அடைய அதிக வாய்ப்பு உள்ளது என்றும் நிபுணா்கள் தெரிவித்தனா்.

தொழில்நுட்பக் கணக்கு

கடந்த வாரம் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 400 புள்ளிகள் வீழ்ச்சியைச் சந்தித்தாலும், பின்னா் மீட்சி பெற்ற இறுதியில் 0.7 சதவீதம் ஏற்றத்துடன் முடிந்துள்ளது. எனவே, இந்த வாரம் நிஃப்டி 9500-10,400 புள்ளிகளுக்கிடையே வா்த்தகமாவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தொழில்நுட்ப வல்லுநா்கள் கருதுகின்றனா். இருந்தாலும், 10,400 புள்ளிகளைக் கடந்தால் காளையின் ஆதிக்கத்தை எதிா்பாா்க்கலாம் என்றும், கீழே 9,500 புள்ளிகளை பிரேக் செய்தால் கரடியின் பிடி இறுகும் என்றும் நிபுணா்கள் கருதுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com