சிந்தியாவின் குறுக்குவழியை எளிதாக்கிய பாஜகவினர் யார்?

மத்தியப் பிரதேசத்தில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி, பாரதிய ஜனதா கட்சிக்குத் தாவ ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு வழிவகுத்தது யார் என்பதுதான் இப்போது அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதம்.
சிந்தியாவின் குறுக்குவழியை எளிதாக்கிய பாஜகவினர் யார்?

மத்தியப் பிரதேசத்தில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி, பாரதிய ஜனதா கட்சிக்குத் தாவ ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு வழிவகுத்தது யார் என்பதுதான் இப்போது அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதம்.

இதுதொடர்பாக சில வாரங்களாகவே நிலவிவந்த குழப்பத்தையும் காங்கிரஸ் கட்சியுடனான தனது 18 ஆண்டுகால தொடர்பையும் புதன்கிழமை முடிவுக்குக் கொண்டுவந்து பாஜகவில் இணைந்தார் சிந்தியா.

சிந்தியாவுக்கு இந்த மாற்றத்தை ஒரு மென்மையான செயல்முறையாக மாற்றியது யார்? சிந்தியாவை பாரதிய ஜனதா முகாமுக்கு அழைத்து வருவதில் பாஜகவில் யார் பணிபுரிந்தார்கள்? 

இந்தப் பணியில் முனைப்பாக ஈடுபட்ட பாஜகவின் மேலிட நம்பிக்கையைப் பெற்ற நட்சத்திரம் யார்? 

பாஜக செய்தித் தொடர்பாளரும் ஊடகங்களில் நன்கு அறியப்பட்டவருமான ஜாபர் இஸ்லாம், சிந்தியாவை பாஜக வளையத்துக்குள் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றியுள்ளார் என்று கூறப்படுகிறது. 

இஸ்லாம் அரசியலில் நுழைவதற்கு முன், ஒரு வெளிநாட்டு வங்கியில் பணிபுரிந்து அதிக சம்பளத்தை ஈட்டி வந்துள்ளார். பின்னர், பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் தாக்கத்தால் பாஜகவில் இணைந்துள்ளார். 

மிகவும் மென்மையாகப் பேசும் இஸ்லாம், மோடியுடன் தொடர்ந்து ஒரு "நல்ல உறவை"த் தக்கவைத்து வந்தவர் என்றும்,  அதனால் சிந்தியாவை பாஜக முகாமிற்கு கொண்டுவருவதற்கான பொறுப்பை இவரிடம் பாஜக மேலிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது. 

மத்திய அமைச்சராகத் தில்லியில் சிந்தியா தங்கியிருந்த காலத்தில் நீண்ட காலமாக அவரை அறிந்திருந்த இஸ்லாம் அடிக்கடி சந்தித்துள்ளார். இருப்பினும், கடந்த ஐந்து மாதங்களாக ஜோதிராதித்ய சிந்தியாவை "அதிகளவில் அடிக்கடி" சந்தித்துள்ளார், இதையடுத்து வெளிப்படையாகவே பாஜகவுக்கு சிந்தியா அழைத்து வரப்பட்டுள்ளார். 

இருவரும் சமீபத்தில் "குறைந்தது ஐந்து முறை" சந்தித்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சந்திப்புக்கு பின்னர், இணைவதற்கான வவிவகைகள் பற்றி பாஜக உயர்நிலைக் குழுவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறகுதான், அவற்றின் விளைவுகளை கவனமாக ஆய்வு செய்து, சிந்தியாவை பாஜகவுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் மற்றும் "ஆபரேஷன் லோட்டஸ்" தொடங்கியது என்றும் கூறப்படுகிறது.

திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஜாபர் 7, லோக் கல்யாண் மார்க் ஆகிய இடங்களில் சிந்தியா - பிரதமர் மோடி சந்திப்பு நிகழ்ந்துள்ளது. 

உள்ளபடியே, சிந்தியாவுடன் மோடியின் இல்லத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்றபோது,காரில் இஸ்லாம் இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com