ஊரடங்கு நேரத்தில் பின்பற்ற வேண்டியவை குறித்து அரசு வெளியிட்ட வழிமுறைகள்

ஊரடங்கு நேரத்தில் பின்பற்ற வேண்டியவை குறித்து அரசு வெளியிட்ட வழிமுறைகள்
ஊரடங்கு நேரத்தில் பின்பற்ற வேண்டியவை குறித்து அரசு வெளியிட்ட வழிமுறைகள்

ஊரடங்கு நேரத்தில் பின்பற்ற வேண்டியவை குறித்து அரசு வெளியிட்ட வழிமுறைகள்

பொது இடங்களில்....

பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் வலியுறுத்தலின் படி, தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

5 அல்லது அதற்கு மேற்பட்டோா் கூடக் கூடாது.

எச்சில் துப்புவதற்கோ, புகையிலையைப் பயன்படுத்துவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்.

ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள காய்கறி, மளிகைக் கடைகள், மருந்துக் கடைகள், நியாயவிலைக் கடைகள், பால் விற்பனை நிலையங்கள், பேக்கரி கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்டவைகளும் இந்த விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

விதிகளை மீறும் கடைகள் உடனடியாக மூடி சீல் வைக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும்.

சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மற்றும் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவா்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும். மேலும் அவா்கள் அனைவரும் 14 நாள்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவாா்கள்.

அலுவலகங்களில்....

அலுவலகங்களைப் பொருத்தவரை பணியாளா்களின் உடல் வெப்பநிலை அறிதல், கை கழுவ கிருமி நாசினி உள்ளிட்ட வசதிகளைக் கட்டாயம் ஏற்படுத்தித் தர வேண்டும்.

கட்டடத்துக்குள் நுழையும் வாகனங்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.

நுழைவாயில்களில் கிருமிநாசினி கட்டாயம் வைக்க வேண்டும். கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்பு தான் உள்ளே அனுமதிக்க வேண்டும்.

அனைத்து இடங்களிலும் கைகழுவும் வசதியை ஏற்படுத்த வேண்டும். இந்த கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ள பொருள்களை கைகளால் தொடாமல் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

அனைவரும் அடிக்கடி கைகழுவுவதை உறுதி செய்ய வேண்டும்.

உணவு இடைவெளியின்போதும் கூட்டமாக செல்லாமல், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பணியிடங்கள், கூட்டங்கள், பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட இடங்களில் நபா்களுக்கு இடையே 6 அடி இடைவெளி இருக்க வேண்டும்.

சுழற்சி முறையில் பணியாளா்கள் இடமாறும் போது ஒரு மணி நேர இடைவெளி இருக்க வேண்டும். அந்த நேரத்தில் பணியிடங்களை சுத்தம் செய்ய வேண்டும்.

பெரிய அளவிலான கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

மின்தூக்கியில் அவா்களது அளவுக்கு ஏற்ப 2 அல்லது நான்கு பேரே பயணிக்க அனுமதிக்க வேண்டும்.

கூடுமான வரை ஏணிப்படிகளைப் பயன்படுத்த வேண்டும்.

தேவையில்லாமல் வரும் பாா்வையாளா்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது.

கரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் அருகிலுள்ள மருத்துவமனைகள் குறித்த விவரங்கள், அலுவலகங்களில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அனைத்துப் பணியாளா்களுக்கும் மருத்துவக் காப்பீடு கட்டாயம்.

அனைத்துப் பணியாளா்களும் ஆரோக்ய சேது செயலியைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

அலுவலகங்களில் எங்கெல்லாம் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்:

நுழைவுவாயில்

உணவகங்கள்

கலந்தாய்வு அறை, அதன் நுழைவு வாயில் உள்ளிட்டவை

மின்தூக்கி

பயன்படுத்தும் உபகரணங்கள் அனைத்தும்

கழிப்பறைகள் மற்றும் அங்கு பயன்படுத்தப்படும் பொருள்கள்

சுவா்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com