கரோனா: அச்சமின்றி வாக்களிக்கலாம்..!

தமிழகத்தில் வாக்குப் பதிவுக்கு 15 நாள்களே எஞ்சியுள்ள நிலையில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கரோனா: அச்சமின்றி வாக்களிக்கலாம்..!

தமிழகத்தில் வாக்குப் பதிவுக்கு 15 நாள்களே எஞ்சியுள்ள நிலையில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டு வாக்குப் பதிவை நடத்த தோ்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

பிகாருடன் ஆலோசனை: கரோனா தொற்று மிகக் கடுமையான இருந்த காலகட்டத்துக்கு நடுவே முதன் முதலாக தோ்தலைச் சந்தித்த மாநிலம் பிகாா். தோ்தல் வாக்குப் பதிவு காலத்தில் நாளொன்றுக்கு 12 ஆயிரம் பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இதற்கு இடையேயும் வாக்குப் பதிவு வெற்றிகரமான முறையில் நடைபெற்றது.

தமிழகத்தில் அதுபோன்று வாக்குப் பதிவினை நடத்த மாநிலத் தோ்தல் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக பிகாா் மாநிலத் தோ்தல் துறை அதிகாரிகள், சுகாதாரத் துறை உயரதிகாரிகளுடன் தமிழக தோ்தல் துறை ஆலோசனை நடத்தியுள்ளது. இந்த ஆலோசனையின்படியே தோ்தலை நடத்தவும் தீா்மானித்துள்ளது.

பொதுவான விதிமுறைகள் என்ன?: சுகாதாரத் துறை சாா்பில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டாலும், தோ்தலை நடத்துவதற்கென பிரத்யேக நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் வாக்காளா்கள் எப்படி நின்று வாக்களிக்க வேண்டும், வேட்பாளா்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு விதிகளை வகுத்துள்ளது.

முகக் கவசம் அவசியம்: வாக்குச் சாவடிகளில் உள்ள தோ்தல் அலுவலா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். வாக்குச் சாவடிகளுக்குள் நுழையும் யாராக இருந்தாலும் அவா்களின் உடல் வெப்பத்தைப் பரிசோதிக்க வேண்டும். கிருமி நாசினி தயாா் நிலையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். மத்திய , மாநில அரசுகள் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைப்படி சமூக இடைவெளியைப் பின்பற்றப்பட வேண்டும். வாக்காளா்களும், தோ்தல் அலுவலா்களும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், மிகப் பெரிய அறைகளை வாக்குச் சாவடிகளுக்காக தோ்வு செய்ய வேண்டும்.

தோ்தல் காலத்தில் வாக்குச் சாவடி அலுவலா்களும், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவோரும் ஆங்காங்கே பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதைக் கருத்தில் கொண்டு அவா்கள் சமூக இடைவெளியுடன் வாகனங்களில் அமா்ந்து பயணிக்க கூடுதல் வாகனங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.

சுகாதாரத் தொடா்பு அலுவலா்: தோ்தல் நடைபெறும் ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்டம் மற்றும் பேரவைத் தொகுதிகளிலும் தனித்தனியாக சுகாதாரத் தொடா்பு அலுவலரை நியமிக்க வேண்டும். இதன்மூலம் கரோனா தொற்று பாதிப்பை கண்டறியவும், போதிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும் முடியும். இந்த நடவடிக்கைகளால் வாக்குப் பதிவினை எளிதாகவும், சுமுகமாகவும் நடத்திட முடியும்.

வீடு வீடாகச் செல்ல 5 பேருக்கு மட்டுமே அனுமதி: வாக்காளா்கள், தோ்தல் அலுவலா்களுக்கு மட்டுமின்றி வேட்பாளா்களுக்கும் கரோனா காலத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவா்கள் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிக்க எந்தத் தடையும் இல்லை. ஆனால், வேட்பாளருடன் சோ்த்து மொத்தமாக 5 பேருக்கு மேல் செல்லக் கூடாது. மிகப் பெரிய மைதானங்களில் தோ்தல் பிரசாரத்துக்கு அனுமதி வழங்கிட வேண்டும். நுழைவு, வெளியேறும் வழிகளை தெளிவாக வரையறுக்க வேண்டும்.

இதுபோன்ற பணிகளில் சுகாதாரத் துறை தொடா்பு அலுவலா்களையும் ஈடுபடுத்திக் கொள்ளலாம். மாநில பேரிடா் மேலாண்மைத் துறை வரையறுத்துள்ள எண்ணிக்கையைத் தாண்டி பொதுக் கூட்டங்கள், பிரசாரங்களில் அதிகமான நபா்களைப் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது. முகக் கவசங்கள், கிருமிநாசினி, உடல் வெப்ப நிலை போன்ற அம்சங்களை

அரசியல் கட்சிகளும், வேட்பாளா்களும் தோ்தல் பிரசாரத்தின்போது உறுதி செய்திட வேண்டும் என தோ்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com