மனங்கவரும் கீழக்கரை மாசிக் கருவாடு!

ராமநாதபுரம் கீழக்கரை என்றாலே கடல் சார்ந்த வெளிநாட்டுப் பொருள்கள்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், கீழக்கரை உணவுப் பொருள் ஒன்றின் அடையாளமாகவும் இருக்கிறது. அதுதான் மாசிக் கருவாடு!
மனங்கவரும் கீழக்கரை மாசிக் கருவாடு!

கடலில் தீவுகளில் சூரை மீன்கள் அதிகம் கிடைக்கும். தமிழகத்தில் தூத்துக்குடி பகுதி மற்றும் லட்சத்தீவு, மாலத்தீவுகளில் இவை அதிகம் கிடைக்கும். சூரை மீனானது ஒரு கிலோ முதல் 10 கிலோ வரையில் வளரும். இந்த மீன் உண்பவருக்கு ரத்த உற்பத்தியாகும் என்று நம்பப்படுகிறது. மேலும் உடல் நலத்துக்கான மருத்துவ குணமும் மீனில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

சூரை மீனைக் கருவாடாக்கினால் மாசி அழைக்கப்படும். கருவாடாக்குவதற்கு மற்ற மீன்களை உப்புத் தடவி காயவைப்பது வழக்கம். ஆனால், சூரை மீனை சட்டியில் இட்டு அவித்துக் காய வைத்து மாசிக் கருவாடாகப் பயன்படுத்துகின்றனர்.

தமிழ்நாட்டிலேயே கீழக்கரைப் பகுதி மக்களே இந்த வகை மாசிக் கருவாட்டை விரும்பி உண்ணுகின்றனர். ஆகவே அந்த கருவாடுக்கான மீனை மாலத்தீவு பகுதியிலிருந்து வாங்கி வந்து கீழக்கரையில் கடந்த 25 ஆண்டுகளாக எஸ்.எம். மாசிக்கடை எனும் பெயரில் விற்று வருகின்றனர். தினமும் 25 கிலோ வரையில் கீழக்கரையில் மட்டுமே இக்கருவாடு விற்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னைக்கு அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி தினமும் 15 கிலோ கருவாடை பேருந்து, ரயில்கள் மூலம் அனுப்பி வருகிறார்கள். மேலும் தற்போது சேலம், திருச்சி ஆகியவற்றுக்கும் அதிகளவில் மாசிக்கருவாடு விற்கப்படுகிறது.

வெளிநாடுகளான துபை, சௌதி, கத்தார், குவைத் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வாழும் இடங்களில் அதிகம் விற்கப்படுகிறது. மாதந்தோறும் ஒவ்வொரு நாட்டுக்கும் தலா 50 கிலோ வரையில் இந்த மாசிக் கருவாடு அனுப்பிவைக்கப்படுகிறது. நவீன காலத்துக்கு ஏற்ப மாசிக் கருவாட்டை ஊறுகாய், மாசி பொரியல், மாசி பவுடர், மாசி சம்பல் என பாக்கெட்டில் அடைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருவதாகவும் கூறுகிறார் கடையின் உரிமையாளர் எஸ்.எம். கலீல்ரஹ்மான்.

அவர் மேலும் கூறுகையில், பழைய சோற்றுக்கு ஊறுகாய் போல மாசிக் கருவாட்டைப் பயன்படுத்தலாம். வெறும் சோற்றில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்து வகை உணவுகளோடும் மாசிக் கருவாடையும், அதன் மாறுபட்ட பவுடர் போன்றவற்றையும் சேர்த்து சாப்பிடலாம். மாசிப் பவுடரானது கேரட், முட்டைகோஸ், பாகற்காய், கத்திரிக்காய் உள்ளிட்ட அனைத்து வகைக் கூட்டுகளிலும் சேர்த்து சாப்பிடலாம். தற்போது மாசி சம்பல் தேங்காய், வெங்காயம், மிளகாய் வத்தல் சுட்டது, உப்பு ஆகியவை சேர்த்து உற்பத்தி செய்யப்படுகிறது. மாசிக்கறி எனப்படும் புதிய வகை உணவும் தயாரிக்கப்படுகிறது. மாசிக் கருவாட்டுடன் இறால் உள்ளிட்ட முக்கிய மீன் ஊறுகாயும் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் கீழக்கரை என்றாலே கடல் சார்ந்த வெளிநாட்டுப் பொருள்கள்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், கீழக்கரையானது உணவுப் பொருள் ஒன்றின் அடையாளமாகவும் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

திருநெல்வேலி எனில் அல்வா, விருதுநகர் எனில் புரோட்டா என்பதைப் போலவே ராமநாதபுரம் கீழக்கரை என்றால் மாசிக் கருவாடு என்று அதை உண்டு ரசித்தவர்களுக்கு நினைவுக்கு வரும். ஆம்..மாசிக் கருவாடு மட்டுமல்ல...மயக்கும் கடல் மீன் உணவு...என்பதை ரசித்து...ருசித்துப் பார்த்தவர்களுக்கே தெரியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com