கல்லீரல் புற்றுநோய்: கவனிக்க வேண்டியவை என்னென்ன?

நமது உடலில் உயிர் வாழ்வதற்கான செயல்பாடுகளை கல்லீரல் செய்கிறது. ஆரோக்கியமான கல்லீரல் இல்லையெனில், நாம் உயிர்வாழ முடியாது. 
கல்லீரல் புற்றுநோய்: கவனிக்க வேண்டியவை என்னென்ன?

கல்லீரல் நமது உடலில் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். கல்லீரல் நமது ரத்தத்தில் உள்ள ரசாயனங்களை சீராக்கவும், கழிவுகளை நீக்கவும் உதவுகிறது.

நமது உடலில் உயிர் வாழ்வதற்கான செயல்பாடுகளை கல்லீரல் செய்கிறது. ஆரோக்கியமான கல்லீரல் இல்லையெனில், நாம் உயிர்வாழ முடியாது. 

கல்லீரல் புற்றுநோயின் நான்கு நிலைகள்:

நிலை 1

கல்லீரல் நோயின் முதல் நிலையில், பித்தநாளம் அல்லது கல்லீரலில் வீக்கம் ஏற்படும். ஒருநபரின் உடல் நோய், தொற்றுநோயை எதிர்த்துப் போராடும்போது ஏற்படும் வயிற்றுவலியே முதல் அறிகுறியாக இருக்கும்.

நிலை 2

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு, ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் இரண்டு அல்லது மூன்றாம் நிலையிலேயே கண்டறியப்படுகிறது. இரண்டாம் நிலையில் கல்லீரலில் வடு அல்லது வீக்கம் ஏற்பட்டு கல்லீரலின் ரத்த ஓட்டத்தைத் தடுக்கும்.

நிலை 3

கல்லீரல் நோய் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதற்க்கான விளைவு சிரோசிசாகும். இது சரியான சிகிச்சை அளிக்க தவறினால் உண்டாகும். கல்லீரலின் ஆரோக்கியமான திசு, வடுதிசாக மாறும். கல்லீரலின் ஆரோக்கியமான செல்கள் நோய் தொற்றினால் நாளடைவில் சேதம் அடைந்து, சிரோசிசாக மாறும்.  

நிலை 4

நோயின் இறுதிக் கட்டத்தில், புற்றுநோய் இருந்தால் மேம்பட்ட அல்லது மெட்டாஸ்டேடிக் புற்றுநோய் என்று அழைக்கப்படும். இந்த நிலையில் புற்றுநோய்க் கட்டியானது பிற உடல் பாகங்களுக்கும் பரவி இருக்கும். இதுதான் இறுதிக் கட்டமாக உள்ளது.

டாக்டர் எஸ். விவேகானந்தன்
டாக்டர் எஸ். விவேகானந்தன்

கல்லீரல் நோயின் அறிகுறிகள்

•    சோர்வு
•    குமட்டல்
•    பசியின்மை
•    வயிற்றுப் போக்கு
•    ரத்த வாந்தி
•    மலத்தில் ரத்தம்

கல்லீரல் செயலிழப்பு ஏற்படும் நிலையில், அறிகுறிகள் மிகவும் தீவிரமடைகின்றன. அவற்றின் அறிகுறிகள் பின்வருமாறு: 

•    மஞ்சள் காமாலை
•    மிகுந்த சோர்வு
•    தன்னிலை இழத்தல் (குழப்பநிலை)
•    வயிறு மற்றும் கை, கால்களில் திரவம் சேருதல்

சில நேரங்களில், கல்லீரல் திடீரென செயலிழக்கும். இது கடுமையான கல்லீரல் செயலிழப்பு என்று அழைக்கப்படுகிறது.

கடுமையான கல்லீரல் செயலிழப்பு உள்ளவர்கள் பின்வரும் அறிகுறிகளைக் கொண்டிருக்கலாம்:

•    ரத்தம் கசியுதல்
•    மனநிலையில் மாற்றங்கள்
•    சிறுநீர் கழித்தல்
•    பசியின்மை
•    மஞ்சள் காமாலை
•   கசப்பான அல்லது இனிமையான சுவாச வாசனை
•   செயல்படுவதில் சிரமம்
•    உடல்நிலைசரியில்லை என்ற பொதுவான உணர்வு

கல்லீரல் நோய்க்கான காரணிகள்

கல்லீரல் நோய்க்கான காரணங்கள் பல உள்ளன, அவற்றில் தொற்று, நோயெதிர்ப்பு அசாதாரணம், மரபியல், புற்றுநோய், தொடர்ச்சியாக மது அருந்துதல் மற்றும் மருந்தகங்களில் கிடைக்கும் மருந்துகள் ஆகியவை அடங்கும்.

ஆபத்துக் காரணிகள்

மரபியல் காரணமாக சிலர் கல்லீரல் நோயால் பாதிக்கப்படுவார்கள் என்றாலும், உங்கள் ஆபத்தை அதிகரிக்கக் கூடிய விஷயங்கள் உள்ளன அவை:

•    அதிகமாக மது அருந்துதல்
•    உடல் பருமன்
•    2 ஆம் வகை நீரிழிவு
•    பச்சை குத்துதல்
•    பயன்படுத்தபட்ட ஊசிகளை உபயோகிப்பது
•    ரத்தம் ஏற்றுதல்
•    பாதுகாப்பற்ற உடலுறவு
•    சில இரசாயனங்கள் அல்லது நச்சுகளின் வெளிப்பாடு

தடுக்கும் வழிகள்

கல்லீரல் நோயைத் தடுக்க பல வழிகள் உள்ளன.

•    மது அருந்தும் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும்.
•    பாதுகாப்பற்ற உடலுறவைத் தவிர்க்கவும்.
•    ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும்.
•    ஊசிகளைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும்.

[பிப். 4 - உலக புற்றுநோய் நாள்]


 [கட்டுரையாளர் - நிர்வாக அறங்காவலர், 

சென்னை கல்லீரல் அறக்கட்டளை(Chennai Liver Foundation)]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com