கவனத்தைக் கவரும் கடல்சார் படிப்புகள்!

உலகின் மிகப்பெரிய சொத்து கடல். பல்வேறு வகையான உயிரினங்களின் வாழிடம் அது. நிலத்தில் கிடைக்காத பல அரிய வளங்கள் கடலில் இருக்கின்றன. பல்வேறு வகையான வர்த்தகத்துக்கும், போக்குவரத்துக்கும் கடல் பயன்படுகிறது.
கவனத்தைக் கவரும் கடல்சார் படிப்புகள்!
Updated on
6 min read

உலகின் மிகப்பெரிய சொத்து கடல். பல்வேறு வகையான உயிரினங்களின் வாழிடம் அது. நிலத்தில் கிடைக்காத பல அரிய வளங்கள் கடலில் இருக்கின்றன. பல்வேறு வகையான வர்த்தகத்துக்கும், போக்குவரத்துக்கும் கடல் பயன்படுகிறது. மீன்பிடித்தல், துறைமுகப் பணிகள், கப்பல் பணிகள், கடல் தொடர்பான சட்டங்கள், கடல் வணிக மேலாண்மை என கடலைச் சார்ந்த துறைகள் ஏராளம். தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் கடல் சார்ந்த பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள், தொழிற்சாலைகள், துறைமுகங்கள், மீன்பிடி தொழில், சுற்றுலா, தாதுவளம் பயன்பாடு, உப்பு தயாரிப்பு போன்றவை நடந்து வருகிறது. குறிப்பாக தமிழக கடற்கரை பகுதிகளில் கடற்பாசி, கடற்புல், கடல் தாவரங்கள் உள்ளிட்டவை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொக்கிஷமாக உள்ளன.

கடல்சார் துறைகளில் தாரளமான வேலைவாய்ப்பு இருக்கிறது. கடல் தொடர்பான வேலைகளுக்குப் படிக்கும் படிப்புகளை கடல் சார் படிப்புகள் என்று அடக்கினாலும், அதில் பலவகையான பிரிவுகள் இருக்கின்றன. அவ்வப்போது புதிது புதிதாகப் பல்வேறு துறைகள் வந்துகொண்டும் இருக்கின்றன. இதில் விசேஷம் என்னவென்றால், கடல்சார் படிப்புகளுக்கு அதிக வேலை வாய்ப்பு இருப்பதுடன், ஊதியமும் மற்ற துறைகளைக் காட்டிலும் மிக அதிகமாகவே இருக்கிறது. கடல்சார் படிப்புகளில் மிகவும் அதிக வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதும், பிரபலமானதும் மெரைன் என்ஜினியரிங் எனப்படும் கடல்சார் பொறியியல் படிப்பாகும். கடந்த பல வருடங்களாகவே, இந்தப் படிப்பில் மாணவர்களின் ஆர்வம் பெருமளவில் அதிகரித்து வந்திருக்கிறது.

அந்த படிப்பு தற்போது பல பொறியியல் கல்லூரிகளில் பாடப்பிரிவாக இருந்து கற்றுகொடுக்கப்பட்டாலும், அந்தப் படிப்பிற்கென்றே சில பிரத்யேக கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானதும் தலைமையானதும் சென்னையில் அமைந்துள்ள மத்திய கடல்சார் பல்கலைக்கழகம். இந்தியாவில் கடல்சார் படிப்புகளுக்கென்று பல்கலைக்கழகம் வேண்டும் என்கிற கோரிக்கை கடந்த 2008-ம் ஆண்டில்தான் நிறைவேறியது. இதற்கென நாடாளுமன்றத்தில் பிரத்யேகச் சட்டம் இயற்றப்பட்டு கடல்சார் பல்கலைக்கலைக்கழம் சென்னை உத்தண்டியில் (ராஜீவ் காந்தி சாலை - கிழக்குக் கடற்கரைச் சாலை இடையே) அமைக்கப்பட்டது.

4 ஆண்டு பி.டெக். கடல்சார் பொறியியல் மற்றும் 3 ஆண்டு பி.எஸ்சி, கப்பல் கட்டுமானம் மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட படிப்புகளை இந்தப் பல்கலைக்கழகம் வழங்குகிறது. 17 முதல் 25 வயதுக்கு உள்பட்ட 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் சராசரியாக 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழகம் நடத்தும் பொது நுழைவுத் தேர்வில் பங்கேற்க வேண்டும். ஆண்டுக்கு ரூ.2.25 லட்சம் வரை கட்டணம் இருக்கும். பிஎஸ்சி படிப்பு கொச்சியில் நடக்கும். இந்தப் பல்கலைக்கழகத்துடன் 7 முக்கிய கடல்சார் அரசு கல்வி நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

அவை:

1. தேசிய கடல்சார் கல்வி நிறுவனம், சென்னை,

2. டி.எஸ்.சாணக்யா, மும்பை.

3. லால்பகதூர் சாஸ்திரி கடல்சார் உயர் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, மும்பை.

4. கடல்சார் பொறியியல் ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம், மும்பை.

5. கடல்சார் பொறியியல் ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம்.

6. கொல்கத்தா, இந்திய துறைமுக மேலாண்மைக் கல்வி நிறுவனம்.

7. தேசிய கப்பல் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், விசாகப்பட்டினம்.

இவை தவிர கொச்சியில் இந்திய கடல்சார் பல்கலைக்கழக வளாகம் அமைந்துள்ளது

கடல்சார் பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட அரசு கல்வி நிறுவனங்களில் கற்றுத்தரப்படும் படிப்புகள் அனைத்துக்கும் உடனடியாக வேலைவாய்ப்புக் கிடைக்கிறது. கடல்சார்ந்த அனைத்துத்துறைகளிலும் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், குறுகியகாலப்படிப்புகள் இந்தக் கல்வி நிறுவனங்களில் கற்றுத் தரப்படுகின்றன.

பல்கலைக்கழகம் அங்கீகரித்துள்ள படிப்புகளை எட்டுத் துறைகளாகப் பிரிக்கலாம்.

1. துறைமுக மேலாண்மை

2. கப்பல் செலுத்தும் அறிவியல்

3. கடல்சார் பொறியியல்

4. போக்குவரத்து மற்றும் சரக்கு கையாளுதல் (வணி

கக் கல்வி நிறுவனம்)

5. கடல்சார் அறிவியல்

6. கடல்சார் சட்டங்கள்

7. கடற்கட்டுமானம் மற்றும் கப்பல் கட்டுதல்

8. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து

தேசிய கடல்சார் கல்வி நிறுவனம், சென்னை.

உத்தண்டியில் அமைந்துள்ள கடல்சார் பல்கலைக் கழக வளாகத்தில் இது அமைந்திருக்கிறது. 1985-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் இந்தக் கல்வி நிறுவனம் கடல்சார்ந்த மற்றும் துறைமுகம் சார்ந்த பயிற்சிகளை வழங்குகிறது. இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்கள், சிறிய துறைமுகங்கள், கடல்சார் வர்த்தகம், கடல்சார் வாரியங்கள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே துறைமுகம் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். இவை தவிர கடல்சார் பொறியியல் சம்பந்தமாக 4 வருட பி.டெக். படிப்பும் கற்றுத் தரப்படுகிறது.

இதற்கான மாணவர் சேர்க்கை ஐ.ஐ.டி தேர்வுகள் மற்றும் கொல்கத்தாவின் கடல்சார் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மூலமாக நடக்கிறது. ஆராய்ச்சிப் படிப்புகளும் உண்டு.

முகவரி: தேசிய கடல்சார் கல்வி நிறுவனம்,

கிழக்கு கடற்கரை சாலை, உத்தண்டி,

சென்னை 600 119.

தொலைபேசி : (044) 24530343 / 345.

பேக்ஸ் : (044) 2453 0342.

மின்னஞ்சல் : imu.chennaicampus@yahoo.com

டி.எஸ்.சாணக்யா கல்வி நிறுவனம்

அரபிக் கடலோரம் நவி மும்பையில் டி.எஸ். சாணக்யா பயிற்சிக் கப்பல் கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. உலகில் தலைசிறந்த கடல்சார் கல்வி நிறுவனங்களுள் இதுவும் ஒன்று.

இங்கு கற்றுத்தரப்படும் படிப்புகள்:

1. பி.எஸ்சி. - கப்பல் செலுத்தும் அறிவியல் - 3 ஆண்டுகள்

2. கப்பல் செலுத்தும் அறிவியல் டிப்ளமா - 1 ஆண்டு

3. நவீன தீ தடுப்பு படிப்பு - 1 வாரம்

4. சர்வதேச கடல்சார் நெருக்கடிகள் பாதுகாப்பு  அமைப்பு தொடர்பான படிப்பு - 2 வாரங்கள்

பி.எஸ்சி படிப்புக்கு ஐ.ஐ.டி. கூட்டு நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும், 20 வயதுக்கு மேற்படாத திருமணமாகாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும். கல்விக் கட்டணம் 3 ஆண்டுகளுக்கும் சேர்த்து ரூ.98 ஆயிரம்.

முகவரி: டி.எஸ். சாணக்யா கல்வி நிறுவனம், நியூ மும்பை, தொலைபேசி : (022) 2770 1935 / 2770 3876.பேக்ஸ்: (022) 2770 0398

லால்பகதூர் சாஸ்திரி கல்லூரி- கடல்சார் உயர் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி கல்வி நிறுவனம்:

மும்பையில் 1948-ல் தொடங்கப்பட்டது. உலகளவில் கடல்சார் உயர் படிப்புகளுக்கான பெரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இதில் 1200 மாணவர்கள் படிக்கிறார்கள். பல்வேறு கடல்சார் துறைகளில் 46 கடல்சார் படிப்புகள் உள்ளன. படிப்புகள் அனைத்தும் சர்வதேச தரச் சான்று (ஐ.எம்.ஓ) உண்டு. இக்கல்வி நிறுவனம் கடல்சார் அதிகாரிகளுக்கென்றே விரிவான பயிற்சியை வழங்குகிறது.

கடல்சார்ந்த மற்றும் கப்பல் தொழில்சார்ந்த படிப்புகளின் அனைத்து அம்சங்களையும் தேவைகளையும் கருத்தில்கொண்டு, நவீன முறையிலான அனைத்து வசதிகளும் இங்கு உண்டு. சர்வதேச தரத்துடன் 1984-ல் இங்கு ஆரம்பிக்கப்பட்ட கூடுதல் முதுநிலை படிப்பு மற்றும் 1994-ல் ஆரம்பிக்கப்பட்ட முதன்மை பொறியாளருக்கான கூடுதல் படிப்பு ஆகியவை இக்கல்லூரியின் மற்றொரு சிறப்பம்சம். இந்தக் கல்லூரியில் கப்பலில் உள்ளதைப் போன்ற 7 வகையான மாதிரி உருவாக்கிகள்  உள்ளன. இந்த உருவாக்கிகள் கடல்சார் படிப்புகளுக்கு மிகவும் அவசியமாகும். இவற்றைக் கொண்டு 7 துறைகளில் படிப்புகள் நடத்தப்படுகின்றன. அவை:

(1) LNG - LPG Full Mission Simulator

(2) Liquid Cargo Handling Simulator

(3) Engine Room Simulator

(4) Ship Manevering simulator

(5) Radar Simulator

(6) Radar, ARPA and Navigation simulator

(7) GMDSS

முகவரி: லால்பகதூர் சாஸ்திரி கல்லூரி- கடல்சார் உயர் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி கல்வி நிறுவனம்

ஹை பந்தர் சாலை, மும்பை 400 033. தொலைபேசி : (022) 2371 9944/46,

பேக்ஸ் : (022) 2373 9784.

மின்னஞ்சல் : mariner@bom2.vsnl.net.in

கடல்சார் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - மும்பை:

மெக்கானிகல் என்ஜினியரிங் மற்றும் நேவல் ஆர்கிடெக்சர் போன்ற துறைகளில் பட்டம் பெற்றோருக்கு ஒரு ஆண்டு கடல்சார் படிப்பை இந்த நிறுவனம் வழங்குகிறது. ஏற்கெனவே பொறியியல் படிப்பை முடித்தவர்கள் இந்தக் கடல்சார் படிப்பையும் முடித்தால் கடல்சார் பொறியாளராகலாம். இந்த ஒரு வருடப் படிப்பானது, கல்லூரியில் 6 மாதமும், கப்பலில் 6 மாதமும் நடைபெறும்.

கப்பல் செலுத்தும் அறிவியலுக்கான (நாட்டிகல் ஸயன்ஸ்) 3 வருட பி.எஸ்.சி படிப்பும் உண்டு. இதற்கான மாணவர் தேர்வும் ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வு மூலமே நடைபெறும். இப்படிப்பை முடித்தவர் நாட்டிக்கல் அறிவியல் மற்றும் கடல்சார் பொறியியல் ஆகிய 2 துறைகளிலும் தேர்ந்தவராக இருப்பார். இந்த பி.எஸ்சி படிப்பை முடித்தவர்கள், 18 மாத கடல்சார் மற்றும் கப்பல் போக்குவரத்து பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியது கட்டாயம்.

முகவரி:

கடல்சார் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (எம்இஆர்ஐ)

ஹை பந்தர் சாலை, மும்பை - 400 033.

தொலைபேசி : (022) 2377 6136 / 2372 5987 / 2377 1181

பேக்ஸ் : (022) 2375 3151.

மின்னஞ்சல் : meribom@vsnl.com

கடல்சார் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - கொல்கத்தா

கடல்சார் பொறியியல் படிப்புகளை வழங்குவதில் முதன்மையான கல்வி நிறுவனம் கொல்கத்தாவில் உள்ள கடல்சார் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாகும். சுருக்கமாக மேரி (ஙஉதஐ) கடல்சார் பொறியியல் பயிற்சி இயக்குநரகம் என்ற பெயரில் முன்னதாக இந்த நிறுவனம் இயங்கி வந்தது. இங்கு படிக்கும் அனைவருக்கும் உடனடியாக வேலை கிடைத்துவிடும் என்பது இந்த கல்வி நிறுவனத்தின் சிறப்பம்சமாகும். கடல்சார் பொறியியல் படிப்பு படிக்க நினைக்கும் அனைவருக்கும் இருக்கும் முதன்மையான குறிக்கோள் இங்கு படிப்பதாகத்தான் இருக்கும். இன்றைக்கு உலகின் தலைசிறந்த கடல்சார் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இந்நிறுவனம் கருதப்படுகிறது.

எந்த அளவுக்கு இந்த நிறுவனம் பிரபலமோ அதே அளவுக்கு இங்கு இடத்தைப் பெறுவதற்கும் போட்டி அதிகம். இடம் கிடைப்பது அவ்வளவு எளிதானதல்ல. ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தான் இங்குள்ள 4 ஆண்டு கடல்சார் பொறியியல் படிப்புக்கு இடம் கிடைக்கும். இந்தப் படிப்பு அருகிலுள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. நவீன ஆய்வகங்கள், அனைத்து வகையான கருவிகள் என அனைத்து வசதிகளும் இந்த கல்வி நிறுவனத்தில் உள்ளன.

மாணவர்களுக்கு உயர்தர பயிற்சிகளை வழங்குவதற்கான அனைத்து வசதிகளும் இங்கே உள்ளன. அருகிலுள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில், கடல்சார் பொறியியலில் 4 வருட பி.டெக். படிக்கும் மாணவர்களுக்கு இது பயிற்சியளிக்கிறது. பாடத்திட்டமானது, மெக்கானிக்ஸ் ஆப் மெஷின்ஸ், மெடீரியல்ஸ், அட்வான்ஸ்ட் மேதமேடிக்ஸ், அட்வான்ஸ்ட் கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், ப்லூயிட் மெகானிக்ஸ் மற்றும் பிற பொறியியல்தொழில்நுட்ப படிப்புகள் அடங்கியவை.

இவை தவிர, கூடுதலாக நிர்வாக சேவைகள், மேலாண்மை மற்றும் தொழில்முனைதல் படிப்புகள் போன்றவையும் அடக்கம். மேலும் உடற்பயிற்சி, அணி வகுப்பு, வீட்டுப் பராமரிப்பு, நீச்சல் மற்றும் வெளி விளையாட்டு போன்ற பயிற்சிகள் கடல்சார் பொறியாளர்கள் நல்ல உடல் மற்றும் மனோதிடத்துடன் இருப்பதற்காக அளிக்கப்படுகின்றன. தற்போதைய நிலையில் பி.டெக். படிப்பில் 246 இடங்கள் உள்ளன. இது உறைவிடக் கல்வி நிறுவனமாகும். இங்கு படிக்கும் அனைவருக்கும் கேம்பஸ் இண்டர்வியூ முறையில் வேலை கிடைத்து விடுகிறது.

தகுதிகள்: 20 வயது நிரம்பாத திருமணமாகாதவர்கள் மட்டுமே மேரி நிறுவனத்தில் கடல்சார் பொறியியல் படிப்பதற்கு விண்ணப்பிக்க முடியும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை உண்டு. ஐ.ஐ.டி. கூட்டு நுழைவுத்தேர்வில் பங்கேற்பதற்கான அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும்.

ஐ.ஐ.டி. கூட்டு நுழைவுத் தேர்வு, ஐ.ஐ.எம்.எஸ். எனப்படும் இந்திய கடல்சார் படிப்புகளுக்கான கல்வி நிறுவனம் நடத்தும் ஆகிய இரு தேர்வுகளிலும் பங்கேற்க வேண்டும். இந்த இரு தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் - ஜூலை மாதத்தில் கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும். இறுதித் தேர்வின்போது பல்வேறு உடல் தகுதி சோதனைகளும் நடத்தப்படும். மருத்துவப் பரிசோதனைகள், உடல் தகுதி சோதனைகளில் தோல்வியுறுவோருக்கு மேரியில் இடம் கிடைக்காது.

முகவரி: கடல்சார் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

பி - 19, தரதல்லா சாலை, கொல்கட்டா - 700 088

தொலைபேசி : (033) 2401 4673 / 76 & 78

பேக்ஸ் : (033) 2401 4333.

மின்னஞ்சல் : director@merical.ac.in

இந்திய துறைமுக மேலாண்மை கல்வி நிறுவனம்-கொல்கத்தா

கொல்கத்தாவின் துறைமுகம் அருகே இந்தக் கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. துறைமுகம் சார்ந்த படிப்புகள், கடல்சார்ந்த அதிகாரிகளுக்கான பயிற்சிகள் ஆகியவை இங்கு அளிக்கப்படுகின்றன. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஓராண்டு முதுநிலை டிப்ளமா படிப்புகளையும் இந்தக் கல்வி நிறுவனம் வழங்குகிறது.

முகவரி: இந்திய துறைமுக மேலாண்மை கல்வி நிறுவனம்

சுபாஷ் பவன், 2வது மாடி, 40,

சர்குலர் கார்டன் பீச் சாலை, கொல்கட்டா - 700 043.

தொலைபேசி : (033) 2439 4123/4124

பேக்ஸ் : (033) 2439 7179 / 0097.

மின்னஞ்சல் : iipmcal@dataone.in

தேசிய கப்பல் கட்டுமானம் மற்றும் ஆராய்ச்சி மையம், விசாகப்பட்டினம்

கப்பல் கட்டுமானத்துக்கான தேசிய கல்வி நிறுவனம் இது. கப்பல் கட்டுமானம், பழுது நீக்குதல், பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு கடல்சார் படிப்புகளை இந்தக் கல்வி நிறுவனம் வழங்குகிறது.

முகவரி:தேசிய கப்பல் கட்டுமானம் மற்றும் ஆராய்ச்சி மையம்

காந்திகிராம்,  விசாகப்பட்டினம் - 530 005.

தொலைபேசி : (0891) 257 8360 / 257 8364.

பேக்ஸ் : (0891) 2577754.

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், கொச்சி வளாகம்

கொச்சி துறைமுகத்தை ஒட்டி இந்த வளாகம் அமைந்துள்ளது. இங்கு நடத்தப்படும் பல்வேறு படிப்புகள்:

1. பி.எஸ்.சி, கப்பல் பழுது நீக்குதல் மற்றும் கட்டுமானம்

2.எம்.பி.ஏ.-துறைமுகம் மற்றும் கப்பல் மேலாண்மை

3. கடல்சார் பொறியியல் முதுநிலை டிப்ளமா

4. கடல் சட்டங்கள் தொடர்பான முதுநிலைப் படிப்பு

5. ஓராண்டு கப்பல் செலுத்தும் அறிவியல் டிப்ளமா

முகவரி:

கொச்சின் துறைமுக பயிற்சி வளாகம்

வில்லிங்டன் தீவு, கொச்சி - 682003,

தொலைபேசி : (0484) 2668642; 2669457.

மின்னஞ்சல் : cochincampus@imu.co.in

osdcochin@imu.co.in

பிற கல்வி நிறுவனங்கள்: பொதுவாக கடல்சார் படிப்புகள் அனைத்தும் கப்பல்துறை பொது இயக்குனரால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த வகையில் இந்தியா முழுவதும் 127 கல்லூரிகளுக்கு கப்பல்துறை பொது இயக்குநரகம் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. அவற்றுள் தமிழகத்தில் அமைந்துள்ள 28 கல்லூரிகளும் புதுச்சேரியில் அமைந்துள்ள 2 கல்லூரிக

ளும் அடங்கும். அவை:

1. Academy of Maritime Education & Training,

Chennai

2. Balaji Seamen Training Institute, Chennai

3. Chennai School of Ship Management, Chenn

ai

4. Chidambaram Institute of Maritime Te

chnology, Chennai

5. Cosmopolitan Technology of Maritime,

6. Hindustan Institute Of Maritime Training Post

Sea Training Centre, Chennai

7. HIMT College Hindustan Institute Of Maritime

Training Pre-Sea Training Centre, Kancheepur

am

8. GKM College of Engineering & Technology,

Chennai

9. Indian Maritime College, Chennai

10. Indus Seafarers Training Academy,

Chennai

11. International Maritime Academy,

Chennai

12. Maritime Foundation, Chennai

13. MASSA Maritime Academy, Chennai

14. Indian Maritime University (National Maritime

Academy), Chennai

15. S.B.Vignesh Marine Training Centre, Chenn

ai

16. Southern Academy of Maritime Studies,

Chennai

17. Vel’s Academy of Maritime Studies (Nautical

Science), Pallavaram, Chennai

18. Vel’s Academy of Maritime Studies (Marine

Engineering), Thalambur, Chennai

19. Coimbatore Marine College, Coimbatore

20. Park Maritime Academy, Coimbatore

21. SeaSkills Maritime Academy, Coimbatore

22. Noorul Islam College of Engineering, Kany

akumari

23. R.L Institute of Nautical Science

24. Mohammed Sathak Engineering College, Kil

akarai

25. Sri Chakra Maritime College, Puducherry

26. Marine Officers Training Academy, Pudu

cherry

27. Srivenkateshwara College of Engineering,

Sriperumbudur

28. Tamilnadu Maritime Academy, Thoothukudi

29. PSN College of Engineering & Technology,

Tirunelveli

30. Sri Nandhanam College of Engineering & Te

chnology, Vellore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com