மாணவர்கள் அவரவர் வகுப்புக்கேற்றவாறு வாசிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்: கல்வி அதிகாரி
டிசம்பர் மாதத்திற்குள் 2-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அவரவர் வகுப்புக்கேற்றவாறு சிறுவர்....


டிசம்பர் மாதத்திற்குள் 2-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அவரவர் வகுப்புக்கேற்றவாறு சிறுவர் இதழ்கள், செய்தித்தாள் உள்ளவற்றை படிக்கும் திறனைப் பெற்றிருக்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் சரக கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லூ.ஜான்சேவியர்ராஜ் கூறினார்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு படித்தல், எழுதுதல் திறன் வளர்த்தல் குறித்த இரு நாள் பயிற்சி கிருஷ்ணன்கோவிலில் உள்ள வட்டார வளமையத்தில் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் நடைபெற்றது. பயிற்சியை செவ்வாய்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஆசிரியர்களிடையே பேசுகையில் கூறியதாவது:
2-5 வகுப்பு மாணவர்கள் டிசம்பர் மாத இறுதிக்குள் அவரவர் வகுப்புக்கேற்றவாறு வாசித்தல் திறனில் முழுமை பெற்றிருக்க வேண்டும். மேலும் இதே வகுப்பு மாணவர்கள் அவரவர் வகுப்புக்கேற்றவாறு சிறுவர் இதழ்கள், செய்தித்தாள்கள், கதை புத்தகங்கள், விளம்பரப் பலகைகள், அறிவிப்புப் பலகைகள், கையெழுத்துப் பிரதிகள் என பாடபுத்தகத்திற்கு வெளியேயுள்ள காரியங்களையும் வாசிக்க தெரிந்திருக்க வேண்டும். இதற்காக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அடிக்கடி பன்முகப் பயிற்சி அதாவது அடிக்கடி பயிற்சி அளிக்க வேண்டும். தினமும் மாணவர்களுக்கு சொல்லுதல் எழுதுதல் பயிற்சி 10 வார்த்தைகளாவது கொடுத்து ஆசிரியர்கள் திருத்தம் செய்ய வேண்டும். இதற்காகவே இந்த இரு நாள் பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியை முழுமையாக ஆசிரியர்கள் பள்ளிக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றார் அவர்.
பயிற்சியில் படித்தல், எழுதுதல் திறன் வளர்த்ல் பயிற்சி அளிக்கும் போது, மாணவர்களிடம் ஏற்படக்கூடிய இடர்பாடுகள், அதற்கான தீர்வுகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.
பயிற்சியின் கருத்தாளர்களாக ஆசிரியப் பயிற்றுநர்கள் சுந்தரேஸ்வரி, முத்துலட்சுமி, பழனிச்சாமி, மருதக்காளை, ஜூடு அமலன், தர்மர் ஆகியோர் செயல்பட்டு பயிற்சி அளித்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி செய்திருந்தார். பயிற்சியில் 158 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...