
• உலகில் தோன்றிய முதல் விளையாட்டுப் போட்டி எது?
தடகளப் போட்டிகள்
• தடகளப் போட்டிகளில் அடிப்படை வகைகள் எவை?
பொதுவாக ஓடுதல், தாண்டுதல், குதித்தல், வீசுதல், நடத்தல்.
• பந்தயப் பணம் என்பது எப்போது நடைமுறைக்கு வந்தது?
எடின்பரோ நகர் (இங்கிலாந்து) பவுடர்ஹாலில் நடைபெற்ற, வாராந்திரப் போட்டிகளில் பந்தயப் பணம் பெருமளவில் புரண்டது.
• டெகாதலான் போட்டி என்றால் என்ன?
டெகாதலான் என்றால் பத்து வகைப் போட்டிகள்.
• டெகாதலான் போட்டியில் அடங்கியுள்ள ஆட்டங்கள் எவை?
100 மீ. ஓட்டப்பந்தயம், அகலம் தாண்டுதல் மற்றும் உயரந்தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீ ஓட்டப் பந்தயம் (முதல் நாளில் நடைபெறும்) 100 மீ. இடம் ஓட்டம், தட்டு எறிதல், கோல் வைத்துத் தாண்டல், ஈட்டி எறிதல், 1500 மீ. மத்திய தூர ஒட்டம் (இரண்டாம் நாள்)
• டெகாதலான் போட்டி ஒலிம்பிக்கில் எப்போது இடம் பெற்றது?
1912 ஆண்டு ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக்கில்.
• பெண்டதலான் ஆண்களுக்கான போட்டிகள் எவை?
5 வகைப்படும். அவை அகலந்தாண்டுதல், ஈட்டி எறிதல், 200மீ. ஓட்டம், தட்டு எறிதல் மற்றும் 1500 மீ. ஒட்டம்.
• பெண்களுக்கான பென்டத்லான் போட்டிகள் எவை?
முதல் நாள்: 100மீ. இடர் ஓட்டம், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல்.
இரண்டாவது நாள்: அகலந் தாண்டுதல், 200 மீ ஓட்டம் (ஒரே நாளில் கூட போட்டிகள் நடக்கலாம்.)
• தடகளப் போட்டிகளில் செயற்கைத் தளம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
டார்டர் என்ற செயற்கைத்தளம், 1968ம் ஆண்டு மெக்ஸிக்கோ ஒலிம்பிக்கில் பயன்படுத்தப்பட்டது.
• தடகளப் போட்டிகளில் ஹீட்ஸ் (Heats) என்றால் என்ன?
முதல் நிலைத் தேர்வு ஆகும்.
• ஹீட்ஸ் எப்போது நடைபெறும்?
போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களின் எண்ணிக்கை 8 பேருக்கு மேல் இருந்தால், ஹீட்ஸ் நடைபெறும்.
• டோப்பிங் சோதனை என்றால் என்ன?
போட்டிகளில் பங்குபெறும் வீரர்கள், போதை வஸ்த்துக்கள் எடுத்துக் கொண்டுள்ளார்களா என்பதை அறியும் சோதனை.
(தொடர்ந்து இணைந்திருங்கள்...தடகளப் போட்டிகள் பற்றி விரிவாக தெரிந்துக் கொள்ளுங்கள்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.