ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தட்டெழுத்துத் தேர்வுகள் ஆக.,29-ம் தேதி தொடக்கம்

தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் சார்பில் நடைபெறும் தட்டெழுத்து தேர்வுகள் இம் மாதம் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெறுகிறது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2015, 6:58 am

கோ.ஜெயக்குமார்

தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் சார்பில் நடைபெறும் தட்டெழுத்து தேர்வுகள் இம் மாதம் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெறுகிறது.

இது குறித்து தமிழ்நாடு தட்டெழுத்து-கணினி பள்ளிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சோம சங்கர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஆண்டு தோறும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் தட்டெழுத்துத் தேர்வினை நடத்துகிறது. 29-ம் தேதி (சனிக்கிழமை) தட்டெழுத்து இளநிலைத் தேர்வு நான்கு அணிகளும், 30-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு ஐந்தாவது அணிக்கும் தேர்வு நடைபெறுகிறது. 30-ம் தேதி காலை 10.20 மணிக்கு தட்டெழுத்து முதுநிலைத் தேர்வுகள் தொடங்கி மூன்று அணிகளாக நடைபெறுகிறது.

29-ம் தேதி தட்டெழுத்து ஆங்கிலம் உயர்வேகத் தேர்வு 10.20 மணிக்கு தொடங்கி 10.30 மணி வரையிலும், தட்டெழுத்து தமிழ் உயர்வேகத் தேர்வு நண்பகல் 12.10 மணிக்குத் தொடங்கி 12.20 வரையிலும் நடைபெறுகிறது.

மேலும் 30-ம் தேதி மாலை 3.50 முதல் 4 மணி வரையிலும், 4.30 மணி முதல் 4.40 வரையிலும் புதுமுக தட்டெழுத்துத் தேர்வு ஆங்கிலம் மற்றும் தமிழ் இரு அணிகளாக நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தும் இந்தத் தேர்வுகள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் 98 மையங்களில் நடைபெறுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.