முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன தேர்வு: விருதுநகரில் 5039 பேர் பங்கேற்பு

தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சனிக்கிழமை நடத்தப்பட்ட முதுகலை பட்டதாரி
முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன தேர்வு: விருதுநகரில் 5039 பேர் பங்கேற்பு
Updated on
1 min read

தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சனிக்கிழமை நடத்தப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வில் 5039 பேர் பங்கேற்று எழுதினார்கள். இத்தேர்வு நடந்த தேர்வு மையங்களில் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் தர்மராஜேந்திரன் கல்வித்துறை அலுவலர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டத்திலிருந்து இத்தேர்வு எழுதுவதற்கு 5346 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக காலையில் 9 மணிக்கே பல்வேறு பகுதிகளில் இருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வில் பங்கேற்பதற்காக தேர்வு மையங்களுக்கு வந்து குவிந்தனர். இத்தேர்வு காலையில் 10 மணிக்கு தொடங்கி, தொடர்ந்து 1 மணி வரையில் நடைபெற்றது. இதில், 5039 பேர்வரையில் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள்.

இதற்காக விருதுநகர் சூலக்கரை கே.வி.எஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி-ஆங்கிலம், கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி-தமிழ், வணிகவியல் பாடங்களும், ஷத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளி-தமிழ்,

சாத்தூர் எட்வர்டு மேல்நிலைப்பள்ளி-இயற்பியல், கணிதம், எத்தல் ஹார்வி மகளிர் மேல்நிலைப்பள்ளி-வேதியியல்,

சிவகாசி எஸ்.எச்.என்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி-பொருளியல், வரலாறு,  எஸ்.என்.வி.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி-வரலாறு,

அருப்புக்கோட்டை தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி-கணிதம், தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி-விலங்கியல்,

உடற்கல்வி இயக்குநர் நிலை-1, எஸ்.பி.கே ஆண்கள் மேல்நிலைப்பள்ளி-தமிழ், தாவரவியல் பாடங்களும்,

எஸ்.பி.கே பெண்கள் மேல்நிலைப்பள்ளி-வணிகவியல் என பாடவாரியாக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில 5039 பேர் தேர்வு எழுதிய நிலையில், 307 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.

ஆசிரியர் தகுதித் தேர்வு நடந்த விருதுநகர் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் தர்மராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com