ஐஐடி, பெங்களூர் ஐஐஎஸ்சியில் எம்.டெக் மற்றும் ஒருங்கிணைந்த முனைவர் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

நாடு முழுவதும் உள்ள ஐஐடி மற்றும் பெங்களூர் ஐஐஎஸ்சியில் எம்.எஸ்சி கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற படிப்புகளுக்கும், எம்.டெக் மற்றும் ஒருங்கிணைந்த முனைவர்
Updated on
1 min read

நாடு முழுவதும் உள்ள ஐஐடி மற்றும் பெங்களூர் ஐஐஎஸ்சியில் எம்.எஸ்சி கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற படிப்புகளுக்கும், எம்.டெக் மற்றும் ஒருங்கிணைந்த முனைவர் படிப்புகளுக்கும் மாணவர்களைச் சேர்ப்பதற்கு ஆண்டுதோறும் JAM(Joint Admission Test) என்ற சிறப்பு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

2015-16 ஆண் ஆண்டுக்கான JAM தேர்வு 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்வை எழுத விரும்புவர்கள் பி.எஸ்சி படிப்பில் 55 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். வரும் அக்டோபர் 14 ஆம் தேதிக்குள் http://jam.iitm.ac.in/jam2016 என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த தேர்வினை தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, உள்ளிட்ட முக்கிய நகரங்களில் எழுதலாம்.

கூடுதல் விவரங்கள் அறிய http://jam.iitm.ac.in இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com