

தொழிலாளர் மேலாண்மை மற்றும் தொழிலாளர் சட்டங்கள் குறித்த படிப்புகள் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தால் நடத்தப்படுகிறது.
ஒரு தொழிற்சாலை என்று இருந்தால் அதில் தொழிலாளர்கள் பணிபுரிவார்கள். தொழிலாளர்கள் பணிபுரியும் போது அவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொழிற்சாலை நிர்வாகத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்துவார்கள். அப்போது தொழிற்சாலையில் அதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரி அவர்களை அழைத்துப் பேசி அதற்கான தீர்வுகளைக் காண்பார். அவர் தொழிற்சாலை நிர்வாகத்திற்கும், தொழிலாளர்களுக்கும் பாலமாக இருந்து, நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பார். அவர் தொழிலாளர் நல அலுவலர் ஆவார். அவருக்கு தொழிலாளர் மேலாண்மை குறித்த அனுபவ அறிவும், தொழிலாளர் நலச் சட்டங்கள் குறித்த கல்வியும் இருக்க வேண்டியது அவசியமாகும். அத்தகைய தகுதியுள்ளவரை தொழிற்சாலை நிர்வாகம் அப்பணிக்கு அமர்த்தும்.
தொழிலாளர் மேலாண்மை மற்றும் தொழிலாளர் சட்டங்கள் குறித்த படிப்புகள் பல்வேறு கல்வி நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. ஆனால் அத்தகைய படிப்புகளை நடத்துவதற்காக தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில் சென்னையில் முதன் முதலாக தமிழக அரசால் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் 1973-ம் ஆண்டு துவக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமாக அது மாற்றப்பட்டது. இது தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறையின் கீழ் இயங்கி வருகின்றது.
வேலை வாய்ப்பு மையம்: இந்த கல்வி நிலையத்தில் வேலை வாய்ப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பல்வேறு தொழில் நிறுவனங்களால் வளாகத் தேர்வு நடத்தப்பட்டு அத்தொழில் நிறுவனங்கள் இங்கு படித்தவர்களை வேலை வாய்ப்பு வழங்கி பணியமர்த்துகின்றன.
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தால் நடத்தப்படும் படிப்புகள்:
B.A. (Labour Management) - 3 Years Semester Pattern
M.A.(Labour Management - 2 Years Semester Pattern
Post Graduate Diploma in Labour Administration (Part Time) - 1 Year (Evening Course) Semester Pattern
Diploma in Labour Laws and Administrative Law (Weekend Programme) - Semester Pattern
Ph.D. Full Time - Part Time
இதோடு மட்டுமல்லாமல், நிறுவனங்களில் பணிபுரியும் மேலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இங்கு தொழிலாளர் மேலாண்மை, தொழிலாளர் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் உள்ள பல்வேறு தொழிலாளர் கல்வி நிலையங்களுடன் இணைந்து கூட்டு முயற்சியிலும் பல பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
மேலும் தகவல்களுக்கு :
Tamilnadu Institute of Labour Studies
No. 5, Kamarajar Salai, Chennai 600 005
Phone: 044 - 28440102, 044 - 28445778
Fax: 044 - 28440966
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.