கால்நடை மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழகத்தில் 6 இடங்களில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்
கால்நடை மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழகத்தில் 6 இடங்களில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் பேச விரும்பும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இன்று முதல் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., சித்த மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

ஆனால், கால்நடை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே நடைபெற உள்ளது. மருத்துவப் படிப்புகளில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கும் மாணவர்கள் அதிக முக்கியத்துவம் அளிப்பது உண்டு. 

பிற மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், நிகழாண்டு கால்நடை மருத்துவப் படிப்பில் சேருவதற்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் ஆர்வம் காட்டுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கல்லூரிகள்: 
1. சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி, சென்னை - 600 007
2. நாமக்கல் - கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 637 002
3. கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி - 627 358
4. கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு, தஞ்சாவூர் - 614 625
5. உணவு மற்றும் பால் தொழில்நுட்ப கல்லூரி, கொடுவல்லி, சென்னை - 600 052 
6. கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை கல்லூரி, ஓசூர் - 635 110

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு, உணவுத் தொழில்நுட்ப பட்டப் படிப்பு, கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு, பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கென மொத்தம் 360 இடங்கள் உள்ளன.  

துறைவாரியான சேர்க்கைக்கான இடங்கள்:
1. BVSc & AH 5½ Years (4½ Years +1 Year Internship - as per MSVE Regulation 2016) - 306
2. BTech (Food Technology) 4 years  - 40
3. BTech (Poultry Technology) 4 years  - 40
4. Technology) 4 years  - 20

மேற்கண்ட படிப்புகளில் சேர இன்று திங்கள்கிழமை (மே 21) முதல் தொடங்கி அடுத்த மாதம் (ஜூன் 6) தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கவும், கட்டணம் செலுத்தலாம். 

விண்ணப்பம் சமர்ப்பித்து கட்டணம் செலுத்திய பின், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தகுந்த சான்றிதழ் நகல்களை சேர்க்கைக்குழு தலைவரின் அஞ்சல் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞசல் முகவரி: "The Chairman, Admission Committee (UG),Tamil Nadu Veterinary and Animal Sciences University, Madhavaram Milk Colony, Chennai-600 051"

மேலும் முழுமையான விவரங்களை http://www2.tanuvas.ac.in/UGAdmission/Instructions/Prospectus.pdf என்ற லிங்கில் சென்று படித்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com