நர்சிங் படிப்புகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்! 

மருத்துவம் சார்ந்த துணை மருத்துவப் படிப்புகளுக்கு திங்கள்கிழமை(ஆக 1) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்கநரகம் தெரிவித்துள்ளது. 
நர்சிங் படிப்புகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்! 

மருத்துவம் சார்ந்த துணை மருத்துவப் படிப்புகளுக்கு திங்கள்கிழமை(ஆக 1) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்கநரகம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் 19 அரசுக் கல்லூரிகள், 4 சுயநிதி கல்லூரிகள் என 23 கல்லூரிகளில் துணை மருத்துவப் படிப்புகளுக்கான டிப்ளமோ மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதில், 19 அரசுக் கல்லூரிகளில் 2,536 இடங்களும், 4 சுயநிதி கல்லூரிகளில் 22,200 இடங்கள் உள்ளன. இதில், 14,157 இடங்கள் அரசு ஒதுக்கீடு செய்துள்ளன. இதையடுத்து துணை மருத்துவப்படிப்புகளுக்கான மொத்த அரசு இடங்களின் எண்ணிக்கை 16,693 ஆக உள்ளது. 

இதையடுத்து டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு 25 அரசு கல்லூரிகள் உள்ளது. இதில் 2060 மாணவர்களுக்கான இடங்களும், 27 துணைநிலை டிப்ளமோ படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்காக அரசு கல்லூரிகளில் 8596 இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அரசு கல்லூரிகளில் மட்டும் துணைநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு 27 ஆயிரம் இடங்களுக்கு மேல் உள்ளது.  

இந்நிலையில், மருத்துவம் சார்ந்த துணை மருத்துவப் படிப்புகளுக்கு திங்கள்கிழமை(ஆக 1) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்கநரகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில்,

தமிழகத்தில் 2022 - 2023-ஆம் கல்வி ஆண்டில் துணை மருத்துவப் படிப்புகளான பி.பாா்ம் (லேட்டரல் என்ட்ரி), போஸ்ட் பேசிக் பிஎஸ்சி நா்சிங் படிப்பு மற்றும் போஸ்ட் பேசிக் டிப்ளமோ இன் சைக்கியாட்ரி நா்சிங் படிப்பு, பெண்களுக்கான செவிலியா் பட்டயப்படிப்பு, மருத்துவம் சாா்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு ஆகிய படிப்புகளில் சேருவதற்கு  திங்கள்கிழமை காலை 10 மணி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களுக்கும் http://www.tnhealth.tn.gov.in என்ற இணையதளங்களை தொடா்பு கொள்ளலாம். இணையதள விண்ணப்பத்துக்கான பதிவு வரும் 12-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com