மே 14, 15-இல் டான்செட் தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

வரும் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
மே 14, 15-இல் டான்செட் தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு


வரும் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கு (டான்செட்) வரும் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

தகுதி: டான்செட் தேர்வு எழுத விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தொலைத்தூரக் கல்வி திட்டத்தின் மூலம் பிஇ, பி.டெக் முடித்தவர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது. 

தேர்வு நடைபெறும் தேதி: டான்செட் தேர்வு வரும் மே மாதம் 15 மற்றும் 15 தேதிகளில் நடைபெறும். 

விண்ணப்பிக்கும் முறை: இதற்கு https://tanct.annauniv.edu/tancet என்ற இணையதளத்தின் மூலம் மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 18 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

தேர்வுக் கட்டணம்: பொது, எம்பிசி, பிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டணமாக ரூ.600. செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் ரூ.300 செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களுக்கு தேர்வு எழுத விரும்புபவர்கள் அவற்றிற்கு தனித்தனியே ரூ.600 அல்லது ரூ.300 செலுத்த வேண்டும்.

தேர்வு மையங்கள்: இந்த நுழைவுத் தேர்வானது தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட 15 இடங்களில் நடைபெறும். 

தேர்வு  நுழைவுச் சீட்டு: தேர்வுக்கான நுழைவுச் சீட்டு மே 2 ஆம் தேதி வெளியிடப்படலாம் எனவும், அப்படி வெளியிடப்பட்டால் அன்றே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்கள் அறிய https://tancet.annauniv.edu/tancet/index.html என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com