தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாட்டில் ஜூன் 2023 இல் நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!


தமிழ்நாட்டில் ஜூன் 2023 இல் நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூன் 2023 இல் நடைபெறவுள்ள் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு தனித் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க விரும் தனித்தேர்வர்கள் ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற அனைத்து மதிப்பெண் சான்றிதழ் நகல்களுடன் தேர்வர் வசிக்கும் மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக மே 9 ஆம் தேதி முதல் மே 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பெருத்தப்பட்டுள்ள வெப் கேமரா வழியாக புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால், அந்நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து உரிய தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

தேர்வுக் கட்டண விவரம்: ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50. முதலாமாண்டு மதிப்பெண் சான்றிதழுக்கு ரூ.100. இரண்டாம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழுக்கு ரூ.100. பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூ.15, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.70 செலுத்த வேண்டும்.

சிறப்பு அனுமதித் திட்டம்(தக்கல்): மே 9 முதல் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தில்(தக்கல்) மே 15 முதல் 16 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். சிறப்பு அனுமதிக் கட்டணமாக கூடுதலாக ரூ.1000 செலுத்த வேண்டும்.

தபால் வழியாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com