கேட் நுழைவுத் தோ்வு விண்ணப்பப் பதிவு தாமதம்! முழு விவரம்

கேட் நுழைவுத் தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கவிருந்த நிலையில் ஆக.28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அது பற்றிய முழு விவரம்
கேட் தேர்வு
கேட் தேர்வு
Published on
Updated on
1 min read

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சோ்வதற்கான கேட் எனப்படும் நுழைவுத் தோ்வுக்கு இளநிலை பட்டதாரிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிப்பப் பதிவு இன்று தொடங்கவிருந்த நிலையில், ஆக. 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ‘கேட்’ நுழைவுத் தோ்வை குவாஹாத்தி ஐஐடி நடத்துகிறது. நாடு முழுவதும் தோ்வுக்கான மையங்கள் 8 மண்டலங்களாக பிரித்து அமைக்கப்பட இருக்கின்றன. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை தொடங்கவிருந்த நிலையில், ஆக.28ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சோ்வதற்கான கேட் நுழைவுத் தோ்வுக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 28ஆம் தேதி வரை அபராதம் இன்றி விண்ணப்பிக்கலாம் என்றும், அக்டோபர் 9ஆம் தேதி வரை அபராதத்துடன் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நுழைவுச் சீட்டு வெளியிடப்படும்.

நுழைவுத தேர்வுகள், 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 7, 8, 14, 15 ஆகிய வார இறுதி நாள்களில் நடைபெறவிருக்கிறது. இந்த நான்கு நாள்களிலும் காலை மற்றும் பிற்பகல் என இரண்டு வேளைகளும் தேர்வுகள் நடத்தப்படுகறிது. நுழைவுத் தேர்வு முடிவுகள் மார்ச் 19ஆம் தேதியும், மதிப்பெண் விவரங்கள் அதன்பிறகும் வெளியாகும்.

நாட்டில் உள்ள ஐஐடி உள்பட மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர ஒவ்வொரு ஆண்டும் கேட் தேசிய நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது.

அதேபோல பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களும் ‘கேட்’ தோ்வு மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு ஊழியா்களைத் தோ்வு செய்கின்றன. மேலும், கணிசமான தனியாா் உயா்கல்வி நிறுவனங்களும் ‘கேட்’ மதிப்பெண் மூலம் மாணவா் சோ்க்கையை நடத்துகின்றன. அதனால், இந்தத் தோ்வு பட்டதாரிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந்த ‘கேட்’ நுழைவுத் தோ்வு கணினி வழியில் நடத்தப்படுகிறது. இயந்திரவியல், கட்டடவியல் உள்பட 30 பாடப் பிரிவுகளுக்கு மொத்தம் 100 மதிப்பெண்கள் கொண்டதாக தேர்வு உள்ளது. இந்த தேர்வு சரியாக 3 மணி நேரம் வரை நடைபெறுகிறது. தோ்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 3 ஆண்டுக்கு இந்த மதிப்பெண் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com