2025-இன் டாப்-5 அறிவியல் + தொழில்நுட்ப படிப்புகள் என்னென்ன?

இதெல்லாம் படித்தால் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்குமாம்!
2025-இன் டாப்-5 அறிவியல் + தொழில்நுட்ப படிப்புகள் என்னென்ன?
Published on
Updated on
1 min read

கல்லூரியில் சேரும் இளம் பருவத்தினர் எந்தெந்த படிப்புகளை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம் என்று சந்தேகத்தில் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக, எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளை அதிகம் வழங்கவிருக்கும் அறிவியல் துறை சார் படிப்புகளையும் அது குறித்து அத்துறை நிபுணர்கள் அளித்துள்ள தகவல்களையும் பார்க்கலாம்.

டேட்டா சயின்ஸ் மற்றும் ஏ.ஐ

கணக்கு, ஸ்டேட்டிஸ்டிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவற்றை ஒருங்கிணைத்த திறன்களை மையப்படுத்தியதே டேட்டா சயின்ஸ். அதன்மூலம் எடுத்த தரவுகளைக் கொண்டு அப்ளிகேஷன்ஸ்(செயல் வடிவப்படுத்துதல்) ஆய்வு செய்தல் ஏ. ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு படிப்பு.

இவற்றின் தாக்கம் உலகளவில் எதிரொலிக்கிறது. இந்த படிப்புகளுக்கு பிரகாசமான எதிர்காலம் இந்தியாவிலும் உலகளவிலும் உண்டு என்பதே சர்வதேச நிபுணர்களின் கருத்து.

சுகாதாரத் துறை படிப்புகள்

உலகளவில் பல நாடுகளிலும் சுகாதாரத் துறையில் 2030-ஆம் ஆண்டுக்குள் 10 மில்லியன் பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

பி.எஸ்சி. மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி, பி.எஸ்சி. அனஸ்தீஸியா டெக்னாலஜி, கார்டியாக் கேர் டெக்னாலஜி, ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி, டையாலிசிஸ் டெக்னீசியன்... இப்படி சுகாதாரத் துறையில் உள்ள படிப்புகளும் அவற்றுக்கான தேவையும் அதிகம்.

குவாண்டம் கம்ப்யூட்டிங்

சூப்பர் கம்ப்யூட்டர் வடிவமைப்புக்கான முக்கிய படிப்பாக குவாண்டம் கம்ப்யூட்டிங் உள்ளது. இதுவொரு வளர்ந்து வரும் துறையாக பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளும் இத்துறையில் அதிகரிக்கும் என்கிறார்கள்.

பைனான்ஸ்

எத்துறை வீழ்ந்தாலும் வளர்ந்தாலும் இத்துறை வீழாது. ஆம்... பணம் அதனைச் சுற்றிய வர்த்தகம் இப்படி பைனான்ஸ் துறையில் எப்போதுமே வேலைவாய்ப்பு இருந்துகொண்டேயிருக்கிறது.

பைனான்சியல் மேனேஜ்மெண்ட், இன்வெஸ்ட்மெண்ட் பேங்கிங், ஃபிண்டெக், பிசினஸ் அனலிட்டிக்ஸ் ஆகிய படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.

  • மேலும், பி.எஸ்சி. டேட்டா சயின்ஸ் & ஏ.ஐ உடன் பைனான்ஸ் சம்பந்தப்பட்ட விருப்ப பாடங்களைத் தேர்ந்தெடுக்கலாம்

  • கம்ப்யூடேசனல் ஸ்டேட்டிஸ்டிக்ஸ்/ மேத்தெமெடிக்ஸ்(கணக்கு)

  • பைனான்சியல் டெக்னாலஜி (ஃபிண்டெக்)

  • கம்ப்யூட்டர் சயின்ஸ் + ஏ.ஐ./ மெஷின் லேர்னிங்

  • எகனாமிக்ஸ் + டேட்டா அனலிடிக்ஸ்

மேலும், அறிவியல் துறையுடன் பிற துறைகள் சார்ந்த படிப்புகளை ஒருங்கிணைத்து படிப்பதால் இந்த காம்பினேசனுக்கு எதிர்காலம் சிறப்பாக இருக்குமென்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அவை,

  • பயோஇன்ஃபர்மேட்டிக்ஸ் - உயிரியலுடன் தொழில்நுட்பம் சார் படிப்புகள்

  • என்விரான்மெண்டல் சயின்ஸ் - புவியைப் பற்றிய படிப்பு

  • நேனோ டெக்னாலஜி - கண்ணுக்கு தெரியாத அறிவியலைப் பற்றிய படிப்பு

  • டிஜிட்டல் ஃபாரன்சிக் - சைபர் செக்யூரிட்டி மற்றும் புலனாய்வு சம்பந்தப்பட்ட படிப்பு

  • ரெனீவபில் எனர்ஜி(புதுப்பிக்கத்தக்க ஆற்றல்) துறை சார் படிப்புகள்

  • நியூரோ சயின்ஸ் - மனித மூளை ஆய்வு சம்பந்தப்பட்ட படிப்புகள்

[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]

Summary

Top Emerging Courses For Science Students In 2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com