சட்டப் படிப்பு சேர்க்கை: விண்ணப்பம் தொடக்கம்!

தமிழகத்தில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர இன்று(மே 12) முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 15 அரசு, 9 தனியார் சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 5 ஆண்டுகால சட்டப் படிப்புகளில் 3,024 இடங்கள் உள்ளன.

இந்தக் கல்லூரிகளில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர இன்று(மே 12)முதல் மே 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விருப்பம் உள்ள மாணவர்கள் www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி பெற்ற மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல், கட்ஆப் மதிப்பெண் விவரங்களை சட்டப் பல்கலைக்கழகம் பின்னர் வெளியிடப்படும்.

இதையும் படிக்க: சித்திரைத் திருவிழாவில் பலியானோரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com