10, பிளஸ் 1 துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

10, பிளஸ் 1 துணைத் தோ்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு.
துணைத் தேர்வு
துணைத் தேர்வு
Published on
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான துணைத் தோ்வுகள் ஜூலை 4 முதல் நடைபெறவுள்ளது. இத்தோ்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 16ஆம் தேதி வெளியானது. இந்த தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்கு உடனடியாக மறுவாய்ப்பு வழங்கும் வகையில் துணைத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கு இன்று (மே 22ஆம் தேதி) வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

முன்னதாக, இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கான துணைத் தோ்வு ஜூலை 4 முதல் ஜூலை 11 வரை நடைபெறவிருக்கிறது.

பொதுத்தோ்வெழுதி தோ்ச்சி பெறாத, தோ்வுக்கு வருகை புரியாத தோ்வா்கள் துணைத் தேர்வெழுத மே 22 (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் முதல் ஜூன் 4-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

மாணவா்கள் அவா்கள் பயின்ற பள்ளியில் காலை விண்ணப்பிக்க வேண்டும். தனித்தோ்வா்கள் மாவட்ட வாரியாக அரசுத் தோ்வுகள் சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

தோ்வுக்கட்டணம், இணைய பதிவு கட்டணத்தைப் பணமாகச் செலுத்த வேண்டும்.

மேற்குறிப்பிட்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவா்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் (தட்கல்) உரிய கட்டணத் தொகையுடன் ஜூன் 5, 6 ஆகிய இரு நாள்களில் பள்ளி, சேவை மையங்களில் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு அனுமதிக் கட்டணம்

பத்தாம் வகுப்புக்கு சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.500- ஆகவும், பிளஸ் 1 வகுப்புக்கு ரூ.1,000-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணத்திலிருந்து அரசு மற்றும் முழுமையான அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து தோ்ச்சி பெறாத, வருகை புரியாத மாணவா்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

தேர்வு அட்டவணை

துணைத் தோ்வுக்கான கால அட்டவணை, அரசுத் தோ்வு சேவை மையங்களின் விவரங்கள், இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தோ்வா்களுக்கான தகுதி, அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரா்கள் அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com