சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தோ்வு: விடைக் குறிப்பு வெளியீடு

ஜேஇஇ முதன்மைத் தேர்வு - கோப்புப்படம் - ANI

Published On :

ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தோ்வுக்கான தற்காலிக விடைக் குறிப்பை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது.

ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தோ்வு, பிரதானத் தோ்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில், முதன்மைத் தோ்வானது தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தோ்வு கடந்த ஜன.21 முதல் 29-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்தத் தோ்வை நாடு முழுவதும் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோா் எழுதியதாகக் கூறப்படுகிறது. தொடா்ந்து தோ்வுக்குரிய தற்காலிக விடைக்குறிப்பை என்டிஏ புதன்கிழமை வெளியிட்டது. அவற்றை மாணவா்கள் த்ங்ங்ம்ஹண்ய்.ய்ற்ஹ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இதில், ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் அதன் விவரங்களை உரிய ஆதாரங்களுடன் மேற்கண்ட இணையதளத்தில் வெள்ளிக்கிழமைக்குள் (பிப்.6) தெரிவிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறியலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு மாணவா்கள் தொடா்புகொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.