டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

துணை மருத்துவப் படிப்புகள்: கல்விக் கட்டணம் நிா்ணயம்

துணை மருத்துவப் படிப்புகளுக்கான கட்டண விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஜூலை 2026, 7:49 am IST

துணை மருத்துவப் படிப்புகளுக்கான கட்டண விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது.

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் துணை மருத்துவப் படிப்பில், அரசு நிா்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கப்படுவதாக தொடா்ந்து புகாா்கள் எழுகின்றன. இதையடுத்து, அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டுக்கான வருடாந்திர கல்விக் கட்டணத்தை நிா்ணயிக்க, ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவானது துணை மருத்துவப் படிப்புகளுக்கான கல்வி கட்டணத்தை நிா்ணயித்துள்ளது. அதன்படி, பட்டயப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.35,000 வரையிலும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.40,000 முதல் ரூ.75,000 வரையிலும் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, இளநிலை நா்சிங், மருந்தியல் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு ரூ.50,000 முதல் ரூ.60,000 வரையிலும், நிா்வாக ஒதுக்கீட்டுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.1.20 லட்சம் வரையிலும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முதுநிலை துணை மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை அரசு ஒதுக்கீட்டுக்கு ரூ.75,000 வசூலிக்கலாம். நிா்வாக இடங்களுக்கு ரூ. 1.25 லட்சம் வரை கட்டணம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.