திரைத்துறை வாய்ப்புகளை பெற்றுத் தரும் பாரதியார் பல்கலைக்கூட படிப்புகள்!

திரைத்துறை வாய்ப்புகளை பெற்றுத் தரும் பாரதியார் பல்கலைக்கூட படிப்புகள் பற்றி...
திரைத்துறை வாய்ப்புகளை பெற்றுத் தரும் பாரதியார் பல்கலைக்கூட படிப்புகள்!
Photo: bpk.py.gov.in
Updated on
1 min read

நவீன நுண்கலைப் படிப்புகள் மூலம் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளைத் தரும் வகையில் புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடம் புதுச்சேரி, அரியாங்குப்பம் அருகே 1987 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு ஓவியம், சிற்பம், நாட்டியம், வீணை, வயலின், மிருதங்கம், வாய்ப்பாட்டு ஆகிய கலைப் படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன.

அவற்றில் நான்காண்டுகள் காட்சிப் படிப்புகளாக பேச்சிலர் ஆஃப் விஷவல் ஆர்ட்ஸ், காட்சித்தொடர்பியல் துறையில் விளம்பர வடிவமைப்பு, விளம்பர ஓவியம், கணினி கிராஃபிக்ஸ். டெக்ஸ்டைல் டிசைனிங் போட்டோகிராஃபி ஜவுனி உருவ வடிவமைப்பு, பிரிண்ட் மேக்கிங் மற்றும் களிமண் சிற்பம், 2 டி, 3டி, களிமண் சிற்பக்கலை, உலோகச் சிலைகள் வடிவமைத்தல் ஆகியவை கற்றுத் தரப்படுகின்றன.

நிகழ்கலைப் பட்டப் படிப்பில் இளநிலை இசை (பிபிஏ - மியூசிக்) உள்ளது. நான்காண்டுப் படிப்பான இதைப் படித்து முடித்தால் திரைத் துறை, இசை சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம். இந்தத் துறையில் வாய்ப்பாட்டு வீணை, வயலின், மிருதங்கம் ஆகியவையும் பயிற்றுவிக்கப்படுகின்றன.

நடனப் பாடத் துறையில் (பிபிஏ-டான்ஸ்) பரத் தாட்டியம் மோகினி ஆட்டம் ஆகியவை கற்றுத் தரப்படுகின்றன. நாடக, திரைத் துறையில் சேர்வதற்கு ஏற்ற வகையில் கற்பித்தல் உள்ளது.

பல்கலைக்கூடத்தில் மூன்றாண்டு பட்டயப் படிப்பாக தவில், நாகசுவரம் ஆகியவை பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்தப் பிரிவின் மூலம் மாலை நேரத்தில் 6 மாத காலப் பட்டயப் படிப்பாக இசை, நடனம், ஓவியம் ஆகியவையும் கற்பிக்கப்படுகின்றன.

மேற்கண்ட இசை, நடனம், நுண்கலைப் பிரிவுகளுக்கான 30 இடங்களுக்கும் சென்டாக் மூலம் விண்ணப்பிக்கலாம். அதன்படி கலந்தாய்வு நடத்தப்பட்டு பாடத் துறைகளில் மாணவ மாணவிகள் சேர்க்கப்ப டுகின்றனர். நாககரம், தவிலுக்கு மட்டும் கலைக்கூடத்தில் நேரடிச் சேர்க்கை நடைபெறுகிறது.

பட்டப் படிப்புகளுக்கு பிளஸ் 2 தேர்ச்சியும், பட்டயப் படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் போதுமானது. சென்டாக் இணையதளத்தில் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

பாரதியார் பல்கலைக்கூடத்தில் பட்டம், பட்டயப் படிப்பு முடித்தோருக்கு திரைப்படத்துறை உள்ளிட்டவற்றில் வேலை கிடைக்கும் வாய்ப்பிருப்பதாகவும் கூறுகிறார் அதன் முதல்வர் பி.வி.போஸ்.

தமிழ் தெலுங்கு திரைப்படத் துறைகளில் நடனம், ஒளிப்பதிவு உள்ளிட்ட பிரிவுகளில் புதுவை பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் திரைத்துறையில் புகழ்பெற்ற நடன கலைஞர்களாகவும் புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு கலைஞர்களாகவும் பாரதியார் பல்கலைக்கூடத்தில் பயின்றவர்கள் இருந்து வருகின்றனர். பாரதியார் பல்கலைக்கூடத்தில் கடத்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு, நிகழாண்டில் முதுநிலைப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. காட்சிப் பிரிவு, இசை, நடனம் ஆகியவற்றில் முதுநிலைப் படிப்புகள், புதுச்சேரி பல்கலைக்கழக அனுமதியுடன் நடைபெறுகின்றன.

Summary

Bharathiar Palkalaikoodam courses that provide opportunities in the film industry.

திரைத்துறை வாய்ப்புகளை பெற்றுத் தரும் பாரதியார் பல்கலைக்கூட படிப்புகள்!
பல்கலையுடன் இணையும் எஸ்எஸ்என் கல்லூரி! இனி என்னவாகும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com